scorecardresearch

பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்ற திரைக்கதை எழுத்தாளர்; யார் இந்த ராஜு?

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலேவில் கடும் போட்டிக்கு மத்தியில் டைட்டிலை வென்ற ராஜு யார்?

who is Raju Jeyamohan, Bigg Boss Tamil 5 Title winner Raju Jeyamohan, Bigg Boss Tamil 5 Title winner Raju, பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்ற ராஜு ஜெயமோகன், ராஜு, பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு, திரைக்கதை எழுத்தாளர் ராஜு, Raju, Raju Jayamohan, BB Tamil 5, Kamal haasan, vijay tv

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், ராஜு டைட்டிலை வென்றார். யார் இந்த ராஜு?

பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலேவில் 50 லட்சம் பரிசுடன் ராஜு மகிழ்ச்சியாக வீட்டுக்கு சென்றுள்ளார். 2வது இடத்தை பிரியங்கா பிடித்தார். மூன்றாவது இடம் பாவ்னிக்கு வழங்கப்பட்டுள்ளது. 4வது இடத்தை அமீரும் 5வது இடத்தை நிரூப்பும் பிடித்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்களின் பேராதரவோடு பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றிருக்கும் ராஜு முழு பெயர் ராஜு ஜெயமோகன்.

30 வயதான ராஜு ஒரு திரைக்கதை எழுத்தாளர், திருநேல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜு, சென்னையில் வளர்ந்தவர். விசுவல் கம்யூனிகேஷன் டிகிரியைகோவையில் முடித்தார். பல போராட்டங்களுக்கு பிறகு 2017ல் வெளியான நட்புனா என்னணு தெரியுமா என்ற படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். இதையடுத்து, விஜய் டிவியில் கணா காணும் காலங்களில் நடிகராக அறிமுகமானார். கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார். இவருக்கு திருமணமாகி தாரிகா என்ற மனைவி உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வெற்றி பெற்றிருக்கும் ராஜு ஜெயமோகனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Who is raju jeyamohan bigg boss tamil 5 title winner