சூப்பர் சிங்கர் சாம்பியன்: யார் இந்த ஸ்ரீதர் சேனா?
Who is Super Singer 8 Title Winner Sridhar Sena Tamil News சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஜி தமிழ் வழங்கிய 'சரிகமபா' நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Who is Super Singer 8 Title Winner Sridhar Sena Tamil News
Who is Super Singer 8 Title Winner Sridhar Sena Tamil News : பரபரப்பாக நடந்த முடிந்த சூப்பர் சிங்கர் 8-ம் சீசனின் வெற்றியாளராக மக்களின் ஃபேவரைட் போட்டியாளர் ஸ்ரீதர் சேனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Advertisment
2006-ம் ஆண்டு முதல் இன்று வரை சூப்பர் சிங்கர் எனும் புதிய பாடகர்களுக்கான தேடுதல் வேட்டையை வெற்றிகரமாக நடத்தி வருகிறது விஜய் டிவி. ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வயதினருக்கும் ஏற்றபடி இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் எட்டாம் சீஸனின் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த சீசனில் வெற்றிபெறும் அந்த போட்டியாளர், பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கோயம்பத்தூரைச் சேர்ந்த ஸ்ரீதர் சேனா, விரைவில் அனிருத் இசையில் பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
Advertisement
நேற்று நடைபெற்ற அதன் இறுதிச்சுற்றில், முத்து சிற்பி, பரத், அனு ஆனந்த், அபிலாஷ், ஸ்ரீதர் சேனா, மானசி ஆகிய 6 பேர் போட்டியிட்டனர். இசையமைப்பாளர்கள் அனிருத், சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் மாணிக்கம் விநாயகம், சித்ரா, பென்னி தயால், எஸ்.பி.பி.சரண், உன்னி கிருஷ்ணன், அனுராதா ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நடுவர்களின் மதிப்பெண்களோடு மக்களின் வாக்குகளும் சேர்த்து வெற்றியாளரை தேர்ந்தெடுத்தனர்.
அதன்படி, வெற்றியாளரான ஸ்ரீதர் சேனாவுக்கு ரூ. 10 லட்சமும், இரண்டாம் இடத்தை பிடித்த பரத்துக்கு ரூ.3.5 லட்சமும், மூன்றாம் இடத்தை பிடித்த அபிலாஷ்ஷுக்கு ரூ. 2 லட்சமும் பரிசாக அறிவிக்கப்பட்டது. மேலும், மாற்றத்திற்கான போட்டியாளர் என்ற விருதை முத்து சிற்பிக்கு வழங்கப்பட்டது. இவருக்கு, ரூ. 1 லட்சம் வழங்கியது விஜய் டிவி.
ஸ்ரீதர் அசத்தலான பாடகர் மட்டுமல்ல இவர் மிகவும் பிரபலமான குத்துச்சண்டை வீரரும்கூட. இவருடைய இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஜி தமிழ் வழங்கிய 'சரிகமபா' நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil