/indian-express-tamil/media/media_files/2025/10/28/mysskin-2025-10-28-16-15-01.jpg)
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின், தான் இயக்கிய செம்ம ஹிட்டான ‘அஞ்சாதே’ படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் பாண்டியராஜனை அணுகியபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை நியூஸ் 18தமிழ்நாடு யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தன் படங்களில் நடிகர்களை வழக்கத்திற்கு மாறான பாத்திரங்களில் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட மிஷ்கின், ‘அஞ்சாதே’ பட வில்லன் பாத்திரத்திற்காக இயக்குநர் மற்றும் நடிகரான பாண்டியராஜனைத் தேர்ந்தெடுத்தார். பாண்டியராஜனிடம் கதை சொல்லச் சென்றபோது, அவர் முதலில், “என்னுடைய என்னென்ன படங்களை பார்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். மிஷ்கின், “நான் உங்களுடைய ‘ஆண் பாவம்’ படத்தில் சில காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் பாண்டியராஜனுக்குக் கோபம் வந்துவிட்டது. "நான் வில்லனா? என்னை எப்படி வில்லனாகப் பார்க்கிறீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார். அதற்கு மிஷ்கின், “எனக்கு என்னுடைய படத்தில் ஒரு சின்ன, குள்ளமான, சிம்பிளான தோற்றம் கொண்ட, ஆனால் அவருக்குள் ஒரு வில்லத்தனம் மறைந்திருக்கும் ஒரு நடிகர் வேண்டும். வேறு எந்த நடிகரையும் விட உங்களைத்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,” என்று கூறி எப்படியோ அவரைச் சம்மதிக்க வைத்தாராம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/24/pandiyarajan-2025-09-24-18-55-40.jpg)
பாண்டியராஜன் நடிக்கச் சம்மதித்த பிறகு, மிஷ்கின் ஒரு நிபந்தனையை விதித்துள்ளார். “சார், இந்தப் படத்துக்காக நீங்கள் கண்டிப்பாக மீசையை எடுக்க வேண்டும்,” என்று மிஷ்கின் கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும், பாண்டியராஜன் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி, கோபத்தில், "நான் வளர்ந்ததுல இருந்து இப்படித்தான் இருக்கேன். 17 வயதில் இருந்து மீசையோடு இருக்கேன். அதெல்லாம் எடுக்க முடியாது. நீங்க வெளியே போயா!" என்று மிஷ்கினைத் துரத்திவிட்டாராம். எனினும், மிஷ்கின், “நீங்கள் மீசையை எடுத்தே ஆக வேண்டும்” என்று மீண்டும் வலியுறுத்தி, பல போராட்டங்களுக்குப் பிறகு பாண்டியராஜனை மீசை எடுக்கச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.
பாண்டியராஜன் ஒரு இயக்குநராக இருந்ததால், மிஷ்கினின் இயக்கம் அவருக்குப் புரியவில்லை என்றும், படப்பிடிப்புத் தளம் முழுவதும் இருவருக்கும் இடையே சண்டைதான் இருந்தது என்றும் மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார். படத்தின் அவுட்புட் குறித்து பாண்டியராஜனுக்குத் துளியும் நம்பிக்கை இல்லாமல் இருந்ததாம். “இந்தப் படம் ஓடுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று அவர் நினைத்துக்கொண்டே டப்பிங் கூட இரண்டாவது டேக் இல்லாமல் முறைத்துக்கொண்டு முடித்தாராம்.
ஆனால், முதல் நாள் படம் வெளியாகி ஓடி வந்து பார்த்தபோது, ‘அஞ்சாதே’ செம்ம ஹிட்டானதை அறிந்து பாண்டியராஜன் மகிழ்ச்சியில் வியந்ததாக இயக்குநர் மிஷ்கின் அந்தப் பேட்டியில் விவரித்துள்ளார். இந்தப் படத்தில் பாண்டியராஜன் மீசையின்றி நடித்த வில்லன் பாத்திரம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே இன்றும் பேசப்படும் ஒரு வில்லன் கதாபாத்திரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us