நடிகை டூ கணக்கு டீச்சர்; இந்த ஸ்டார் தான் நடிகர் அரவிந்த் சாமி மாமியார்!

உதிரிப்பூக்கள்' நடிகை அஷ்வினி தான் ஒரு நடிகையாக இருந்து கணக்கு டீச்சராக மாறியது குறித்து அவர் பகிர்ந்துள்ளார். மேலும் தனது சினிமா அனுபவங்களை பற்றியும் கூறியுள்ளார்.

உதிரிப்பூக்கள்' நடிகை அஷ்வினி தான் ஒரு நடிகையாக இருந்து கணக்கு டீச்சராக மாறியது குறித்து அவர் பகிர்ந்துள்ளார். மேலும் தனது சினிமா அனுபவங்களை பற்றியும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ashwini

'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அஷ்வினி. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கோலோச்சிய இவர், தற்போது கணக்கு ஆசிரியராக பங்காற்றி வருகிறார். அஷ்வினி, 'நண்டு' திரைப்படம் வெளியான 1981-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

Advertisment

திருமணத்திற்குப் பிறகு ஒரு இடைவெளி எடுத்துக்கொண்ட அவர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு 1995-ல் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 'இந்திரா' திரைப்படத்தில் மீண்டும் நடித்தார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அனு ஹாசன், நாசர் போன்றோர் நடித்திருந்தனர். 

இந்திரா படத்திற்குப் பிறகு, அஷ்வினிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தபோதிலும், தனது குடும்பத்திற்காக நடிப்பைத் தொடரவில்லை என்றும் மொத்தம் 10 படங்களில் மட்டுமே நடித்துள்ளதாகவும் அவள் விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.  அஷ்வினி, தனது மகளை வளர்ப்பதில் முழு கவனம் செலுத்தியதால் படம் நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றார். 

தற்போது அஷ்வினி, ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ மாணவர்களுக்கு வீட்டில் கணக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இது தனது மகளுக்காக ஆரம்பித்த முயற்சி என்றும், இப்போது அதை முழுநேர பணியாக மாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

Advertisment
Advertisements

மாணவர்களுடன் மிகவும் நட்புடன் பழகும் அஷ்வினி, ஒரு கண்டிப்பான ஆசிரியராக இல்லாமல், சிரிப்பும் விளையாட்டும் நிறைந்த சூழலில் கற்பிப்பதாகக் கூறுகிறார். கணக்கு ஆசிரியர் பணி தவிர, அஷ்வினி ஒரு அக்குபிரஷர் சிகிச்சை நிபுணராகவும் உள்ளார்.

கழுத்து வலி, முதுகு வலி, கை வலி, கால் வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறுகிறார். இதுகுறித்து கோர்ஸ் முடித்துள்ளதாகவும், ஆனால் சிலருக்கு, குறிப்பாக தனது மகளுக்கே, இதில் நம்பிக்கை இல்லை என்றும் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

அஷ்வினி ஒரு சிறந்த பாடகி என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல். 'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே' போன்ற பாடல்களை அழகாகப் பாடி அசத்தும் இவர், அடிக்கடி பயிற்சி மேற்கொள்வதாகக் கூறினார். பாட்டு மட்டுமின்றி, விசிலிங் செய்வதிலும் அவருக்கு தனித்திறமை உண்டு.

'அழகிய கண்ணே' போன்ற பாடல்களை விசில் மூலம் அருமையாக வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார். சிறு வயதில் விசில் அடிப்பது குறித்து தனது அம்மா கண்டித்ததாகவும், ஆனால் அது இன்றும் தொடர்வதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

அஷ்வினியின் இந்த பல்வகைப்பட்ட வாழ்க்கை, ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு தாய், ஒரு ஆசிரியர், ஒரு சிகிச்சை நிபுணர் என பல பரிமாணங்களில் அவரது திறமைகளையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

'உதிரிப்பூக்கள்' அஷ்வினி என்ற அடையாளம் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பதற்கு,  தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நன்றி கூறுகிறார். 

aravind swamy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: