நடிகராக களமிறங்கும் இசை வாரிசு; படத்தின் இயக்குனர் லிங்குசாமி? ரஜினி பட இசை அமைப்பாளர் மகன் யார் தெரியுமா?

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிற்குள் நுழைவது எப்போதும் இயல்பான ஒன்றுதான் அந்த வரிசையில் பிரபல பாடகரின் மகனும் இணைந்துள்ளார். இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிற்குள் நுழைவது எப்போதும் இயல்பான ஒன்றுதான் அந்த வரிசையில் பிரபல பாடகரின் மகனும் இணைந்துள்ளார். இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
harshavarthan

தமிழ் சினிமா எப்போதும் புதிய திறமைகளை வரவேற்கிறது, குறிப்பாக பிரபலமான குடும்பங்களில் இருந்து வரும் வாரிசுகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில், தற்போது ஒரு பிரபலமான இசையமைப்பாளர் மகன்  நடிகராக அறிமுகமாக உள்ள தகவல் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமா உலகில் பல முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் பெற்றோரின் அடியொற்றி வந்தவர்கள் தான்.

Advertisment

விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு, அருண்விஜய் என பலரும் இந்த வரிசையில் அடங்குவர். இப்போது  இந்த பட்டியலில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இணைகிறார். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது திறமையை நிரூபித்தவர் ஹர்ஷவர்தன். இப்போது அவர் நடிப்பில் தனது புதிய பயணத்தைத் தொடங்க உள்ளார். ஏற்கனவே ஹர்ஷவர்தனும் ஷிவாங்கியும் இணைந்து பாடிய பாடல் வீடியோக்கள் மற்றும் வித்யாசாகரின் பாடல்களை மாஸ் -அப் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

vidhyasagar harshavarthan

ஹர்ஷவர்தன் அறிமுகமாகும் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க உள்ளார் என்பது கூடுதல் சுவாரஸ்யமான தகவல். லிங்குசாமி இயக்கிய 'பையா' திரைப்படம், ஒரு ரொமாண்டிக் ரோடு டிராவல் கதையாக அமைந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. அதே பாணியில், ஹர்ஷவர்தன் நடிக்கும் படமும் ரொமாண்டிக் ரோடு டிராவல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

ஒரு இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறும் ஹர்ஷவர்தனின் இந்த முயற்சி, அவருக்கு சினிமா உலகில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கும் என நம்பப்படுகிறது. வித்யாசாகரின் மகன் என்ற அடையாளத்துடன், தனது சொந்த திறமையால் ரசிகர்களை கவர ஹர்ஷவர்தன் தயாராகி வருகிறார். அப்படி போடு என்ற அதிரடி குத்து பாடலாக இருந்தாலும் சரி, அதற்கு நேர் மாறாக மலரே மௌனமா என்ற மெலோடி பாடலாக இருந்தாலும் அனைத்து ஜானர்களிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். இந்நிலையில் அவரது மகன் ஹர்ஷவர்தன் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது நடிக்க உள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: