ஆங்கிலத்தில் படிக்க : Why Lokesh Kanagaraj or Tamil cinema can’t emulate David Cronenberg’s A History of Violence
ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் ஹாலிவுட் படங்களை உரிய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்ய தற்போது எந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், கிறிஸ்டோபர் நோலனின் மெமண்டோ படம் இப்போது கஜினியாக வர சாத்தியமில்லை. வேறு மொழிகளில் இருந்து ஒரு படத்தை எடுத்தாலும், பலகட்ட ஆய்வுக்கு பின்னர் உரிய அனுமதி பெற்றே படத்தை எடுக்க வேண்டும். அதற்கு முக்கிய உதாரணமாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.
டேவிட் க்ரோனன்பெர்க்கின் ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் (2005) படத்தை தழுவி எடுக்கப்பட்ட லியோ படத்தின் டைட்டில் கார்டில் அந்த படத்திற்கு க்ரிடீட் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த க்ரிடீட் தேவையில்லாதது தான். ஏனென்றால், எ ஹிஸ்ரி ஆஃப் வைலன்ஸ் என்பது ஒரு நாவல். இது மிகப் பழமையான ஆக்ஷன்-ஹீரோ கதைகளில் ஒன்றாகும். பயங்கரமான கடந்த காலத்தைக் கொண்ட ஒரு மனிதனின் கதை. அமிதாப் பச்சனின் ஹம் முதல் ரஜினிகாந்தின் பாஷா, கமல்ஹாசனின் விக்ரம் வரை, பல படங்களில் வந்த கதை தான். இது உலகெங்கிலும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நாவல் எழுத்தாளர்களால் எடுக்கப்பட்டது.
இதை வைத்து தான் டேவிட் க்ரோனன்பெர்க் அல்லது ஜான் வாக்னர், எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற நாவலை எழுதியுள்ளனர். மேலும், க்ரோனென்பெர்க்கின் ஹிஸ்ட்ரி ஆப் வைலன்ஸ் படம் கதையைப் பற்றியது அல்ல, அது ஒரு ட்ரீட்மெண்ட். இது மையக் கதாபாத்திரமான டாம் ஸ்டால் (விகோ மோர்டென்சன்) அல்லது ஜோயியைப் பற்றியது. உண்மையில் யார் கதாநாயகன் என்பது பற்றியது. அவர் ஒரு ஓட்டலை நடத்தும் சாதாரண குடும்ப மனிதரா? அல்லது அவனுள் இருந்த கெடடவனை அழித்தவனா? அல்லது கொலை செய்வதில் நாட்டம் கொண்ட அரக்கனா? என்பதை எடுத்து கூறும் ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் ஒரு ஆக்ஷன் படத்தை விட உளவியல் கதை என்று சொல்லலாம். அதனால் லியோ படத்தை பார்ப்பது போன்ற சிந்தனைகள் நமக்குக் கிடைக்காது, ஏனெனில் லியோ ஒரு வர்த்தக ரீதியான தமிழ் திரைப்படம்.
டேவிட் க்ரோனன்பெர்க்கை பின்பற்றிய லோகேஷ் கனகராஜின் முயற்சி லியோ அல்ல என்பதை இப்போது தெளிவுபடுத்த வேண்டிய நேரம். லோகேஷ் ஒரு தமிழ் மசாலா படத்தை, தனது பாணியில் கொடுக்க, ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் படத்தை பயன்படுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால் எ ஹிஸ்ரி ஆப் வைலன்ஸ் படத்தை தமிழ் சினிமா போன்ற ஒரு துறையில் விஜய் போன்ற பெரிய நட்சத்திரத்துடன் உருவாக்குவது கடினமான ஒன்று. இதற்கான கதையை எழுதுவதற்கு முன்பே, எழுத்தாளர் பல காரணிகள் தீர்மானித்திருப்பார். லோகேஷ், சமீபத்தில் வந்த பல நேர்காணல்களில், லியோ 100 சதவீதம் தனது படம் என்று கூறினார். இதற்கு அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை என்று அர்த்தம். ஆனாலும் மார்க்கெட்டிங் தேவையை பூர்த்தி செய்வதற்காக திரைப்படங்களில் பாடல்கள் இணைக்கப்படுகின்றன என்று பின்னர் கூறியிருந்தார்.
இரண்டாவதாக, ஹிஸ்ட்ரி ஆப் வைலன்ஸ் படத்தில் சிற்றின்பமும் காமமும் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரு காட்சியில், எடி ஸ்டால் தனது கணவர் டாம் ஸ்டாலை தனது பெற்றோரின் வீட்டிற்கு நீராவி உடலுறவுக்காக அழைத்துச் செல்வார். இதற்காக அறைக்குள் நுழைவதற்கு முன்பு அவர் விளையாட்டு ஜெர்சி போன்ற ரொமான்டிக் உடையை அணிந்து கொண்டிருப்பார். இது ஒரு பொறுப்பான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தாயின் மறைக்கப்பட்ட ஆசையை பற்றியது. நீராவியில் குளியல் முடிந்து எடி மற்றும் டாமின் உண்மையான நிறம் வெளிவந்தவுடன், உடலுறவு மீண்டும் ஒரு பாலமாக மாறுகிறது. லியோ படத்தில் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் சமரசம் செய்திருப்பார்.
லியோ படத்தில் த்ரிஷா ஜெர்சி அணிந்து வரும் காட்சியை கற்பனை செய்து பார்க்க முடியாது, ஏனென்றால் இது தமிழ் சினிமாவுக்கு அதிகம். மாறாக, படத்தில் வரும் முத்தக் காட்சியே அவ்வளவு தைரியமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இவை முற்றிலும் லோகேஷ் கனகராஜின் குறைபாடுகள் அல்ல, கலாச்சார வரம்புகள் அப்படி இருக்கின்றன. லியோ படத்தின் போஸ்டர் புகைபிடிப்பதை ஊக்கபப்டுத்தியதாக விமர்சிக்கப்பட்டது. நாம் இன்னும் அங்குதான் இருக்கிறோம். இத்தகைய குறைக்கு சமூகத்தை குறை கூறலாம் என்றாலும், லோகேஷ் தனது பார்த்திபன் மற்றும் லியோ கேரக்டர்களை எழுதிய விதத்தை பற்றி எதுவும் விளக்கவில்லை. லியோவின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், பார்த்தி மற்றும் லியோ இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் இரண்டிற்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்க வேண்டும்.
பார்தி லியோவைப் போலவே வன்முறையாளர். அவர் சண்டையிடும் அனைவரையும் எந்த பாதிப்பும் இல்லாமல், லியோவிடம் எதிர்பார்க்காததை, பார்த்திபன் கேரக்டரில் வைத்து ஏமாற்றுகிறார். இத்தகைய நுணுக்கமான எழுத்து தான் ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் மற்றும் லியோ இடையே உள்ள வித்தியாசம். ஹிஸ்ட்ரி ஆப் வைரலன்ஸ் படத்தில் ஜோயி எல்லா வன்முறைகளையும் ரசிப்பதாகக் காட்டப்படும் காட்சி இல்லை. படத்தின் கடைசியில் கூட, குடும்பம் அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் போது, அவன் குற்ற உணர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறான்.
மறுபுறம், லியோ முழு புள்ளியையும் ஒரு கொண்டாட்டத்தில் இணைக்கிறார். அதனால் லியோ கதையைப் பற்றியது அல்ல. அது ஹீரோவைப் பற்றியதாகவே முடிகிறது-அவன் நல்லவனா கெட்டவனா என்பது முக்கியமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“