why Pooja must apologize samantha is trending in twitter now? : கொரோனா வைரஸ் காலத்தில் அனைத்து துறைகளும் முடங்கியிருந்தாலும் நெட்டிசன்களுக்கு தீணி போட ஏதோ ஒரு சங்கதி சிக்கிறுது. தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர், ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கிறார் ”புட்டபொம்மா” ஃபேம் பூஜா ஹெக்டே.மேலும் படிக்க : தமிழ் கற்கும் ராஷி கண்ணா, குட்டி ஸ்ருதி: படத் தொகுப்பு
எல்லா பிரச்சனைக்கும் இந்த ஸ்டோரி தான் காரணம்
நேத்து என்ன நெனச்சாங்களோ, ஏது நெனைச்சாங்களோ திடீர்னு, ”இவங்க ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி அப்டி ஒன்னும் அழகா இல்ல” அப்டின்னு பூஜே ஹெக்டே, அவங்க இன்ஸ்டகிராம் ஸ்டோரில ஒரு ஸ்டோரி போட்டாங்க. உடனே கொதித்தெழுந்த சமந்தா ரசிகர்கள், ட்விட்டரில் வந்து ஹெக்டேவை வசைபாட, சிறிது நேரத்தில், ”என்னுடைய இன்ஸ்டகிராம் ஐ.டி. ஹேக் செய்யப்பட்டுவிட்டது. என்னுடைய தொழில்நுட்ப குழு, பிரச்சனையை பாத்துட்டு இருக்காங்க” என்று ட்வீட் ஒன்றை வெளியிட்டார். ஆனா பாருங்க, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குன்னு நெட்டிசன்கள் பலரும் பேசிக்கிறாங்க.
இன்னைக்கு காலைல இருந்து பூஜா ட்விட்டர் பக்கத்துல ட்ரெண்டாகி வர, மதியத்திற்கு மேல், பூஜா, சமந்தாவிடம் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதில் ட்ரெண்டுக்கு தயாராகிட்டாங்க சமந்தாவின் அன்பு ரசிகர்கள். இது எதப்பத்தியும் கவலைப்படாம ஜாலியா குவாரண்டைன்ல ஜில் பண்ணிட்டு இருக்காங்க சமந்தா. ட்விட்டர் பயங்கரமா இதை பத்தி பேசிட்டு இருக்க, பீஸ் ப்ரோ என்று ஒரு சூப்பர் போட்டோவை போட்டுட்டு போய்ட்டாங்க நம்ம சமந்தா.
அரசியல் வாழ்க்கை போல, சினிமா வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்ப்பான்னு எடுத்துட்டு இருப்பாங்க. ஆனா நீங்க சொல்லுங்க வாசகர்களே, பூஜா இதற்காக சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“