Advertisment

ஜூலை 13 ரஜினிகாந்த்-ன் மறுபிறப்பாக கொண்டாடப்படுவது ஏன்?

ஜூலை 13-ம் தேதி பலருக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கலாம், ஆனால், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஜூலை 13 முக்கியமான நாள். ஏனென்றால், இந்த நாள் ரஜினிகாந்த்தின் மறுபிறப்பைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
why Rajinikanth's fans are celebrates July 13th as the rebirth of Rajinikanth, July 13th as the rebirth of Rajinikanth, ரசிகர்கள் ஜூலை 13-ஐ ரஜினிகாந்த்-ன் மறுபிறப்பாக கொண்டாடுவது ஏன், ரஜினியின் மறுபிறப்பு, Rajinikanth's fans, the rebirth of Rajinikanth

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பினார். ரசிகர்கள் அவரைச் சந்திக்க மிகவும் ஆர்வமாக இருந்தனர். பலர் அவரது உடல்நிலை சீராக பிரார்த்தனை செய்தனர். ரஜினிகாந்த் நாடு திரும்பிய நாளை அவரது ரசிகர்கள் ரஜினியின் மறுபிறப்பு நாளாகக் கருதுகின்றனர்.

Advertisment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைக்கும் தமிழ் சினிமா உலகின் பாக்ஸ் ஆஃபீஸ் மன்னனாக இருக்கிறார். இப்போதும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக நம்பர் 1 நடிகராக இருக்கிறார். இளம் நடிகர்கள் இடையே அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டிதான் நடக்கிறது. ஆனால், யாராலும் அவருடைய இடத்தை பறிக்க முடியவில்லை.

ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950-ல் பிறந்தவர். இப்போது அவருக்கு 73 வயதாகிறது. சிவாஜி ராவ் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும், இந்திய சினிமாவில் மிக முக்கிய ஆளுமையாகவும் திகழ்கிறார்.

ஜூலை 13-ம் தேதி பலருக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கலாம், ஆனால், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஜூலை 13 முக்கியமான நாள். ஏனென்றால், இந்த நாள் ரஜினிகாந்த்தின் மறுபிறப்பைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஊடகங்களில் வெளியான செய்திப்படி, ரஜினிகாந்த் உடல்நிலை மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் மிகவும் போராடியபோது, ​​அவர் நலமுடன் திரும்புவதற்காக பலர் காத்திருந்தனர். ரஜினிகாந்த் தனது 'ராணா' படத்திற்கான படப்பிடிப்புக்குப் பிறகு சோர்வாக இருந்ததாகவும், சிறுநீரக நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ரஜினிகாந்த் இனி எந்தப் படத்திலும் நடிக்க மாட்டார் என்றும், திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் ஆதாரமில்லாத தகவல்கள் வெளியாகி பரவியபோது அவருடைய ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்குப் பிறகு, குணமடைந்து உடல்நலத்துடன் சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பினார்.

அதற்கு பிறகு, ரஜினிகாந்த் எந்திரன் 2, கபாலி, காலா, பேட்டை, தர்பார், அண்ணாத்தே என்று பல படங்களை நடித்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தமன்னா பாட்டியா, சிவ ராஜ்குமார், மோகன்லால், டைகர் ஷெராப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுமட்டுமல்ல, தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு ஜூலை 12-ம் தேதி நிறைவடைந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment