Advertisment
Presenting Partner
Desktop GIF

ஆதிபுருஷ் ஆவேசம்... தமிழ் சினிமாவில் ராவணனுக்கு முக்கியத்துவம் ஏன்?

இலங்கேஸ்வரன், ராவணன், காலா ஆகிய மூன்று தமிழ்ப் படங்கள் ராவணனை நாயகனாக சித்திரித்தது எப்படி என்பதை பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Ramayanam Ravanan

ராவணன், ஆதிபுருஷ் மற்றும் காலா

ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு பிரபாஸ் கீர்த்தி சனோன் சையப் அலிகான் நடிப்பில் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் படம் குறித்த விவாதம் அதிகரித்து வரும் நிலையில், ராமாயணத்தில் வரும் ராவணனை போற்றும் வகையில் தமிழில் வெளியான சில படங்கள் குறித்த விவாதமும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisment

இந்து இதிகாச மற்றும் புராணங்களில் நிகழ்ந்த ஒரு சம்பவம் முக்கிய கேரகட்டர்களில் கண்ணோட்டங்களில் இருந்து பல மாற்றங்கள் இருக்கும். அந்த வகையில் வால்மீகி எழுதிய ராமாயணம் புராணத்திலும் ஒவ்வொரு கேரக்டர் கண்ணோட்டத்தில் இருந்தும் பல மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் குறிப்பாக ராமன் – ராவணனன் இடையேயான போர் குறித்தும், அவர்களுடனான மோதல் குறித்தும் பலவிதமாக கருத்துக்கள் உள்ளது.

ஆனந்த் நீலகண்டன் எழுதிய வான்கிஷ்ட் என்ற புத்தகத்தில் ராமாயணம் பேய் மன்னனின் கண்ணோட்டத்தில் எழுத்தப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரான நீலகண்டன், ராமாயண உலகத்தின் புவியியல் காரணமாக தென்பகுதியில் உள்ளவர்கள் ராவணனுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் மட்டும் ராவணன் அனுதாபம் கொண்டவர் அல்ல. எனவே, தமிழ் சினிமாவும் கூட லங்கேஸ்வரன் மீதான அனுதாபத்தை பிரதிபலிக்கிறது.

இலங்கேஸ்வரன்

தற்போது இந்திய அளவில் ஆதிபுருஷ் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறி வருவதால், மக்கள் ராமாயணத்தின் பல்வேறு பதிப்புகள் குறித்து ஆராய தொடங்கியுள்ளன. இதில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் சுவாரஸ்யமான ஒரு சாற்றாக கூறலாம். இலங்கேஸ்வரன் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை 60-70 களில் முனனணி இயக்குனரான டி.ஆர்.ராமண்ணா இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராஜேஷ் ராவணனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், சீதை ராவணனின் மகள் என்று சொல்லும் கதை ராமாயணத்தில் ஒரு சுவாரசியமான திருப்பம் உள்ளது. ராவணன் தன் மகள் பிறந்ததைக் கொண்டாடுவதுடன் படம் தொடங்குகிறது. தனது மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில், நாடு தழுவிய திருவிழாவிற்கு அனைவரையும் அழைக்கிறார். அதற்கு முன்பாக ராவணன் தனது மகளின் ஜோதிடத்தை அறிய பிரம்மாவை அழைக்கிறார். அப்போது பிரம்மா அந்தப் பெண் ராஜ்யத்திற்கு ஒரு கெட்ட செய்தி என்றும், அவள் அருகில் இருக்கக்கூடாது என்றும் கூறுகிறார். இதை கனத்த இதயத்துடன், ஏற்றுக்கொள்ளும் ராவணன்  அவளை ஒரு மரப்பெட்டியில் வைத்து கடலில் இறக்கிவிடுமாறு கட்டளையிடுகிறான்.

அதன்பிறகு மகள் தன் கணவர் ராமர் மற்றும் மைத்துனர் லட்சுமணனுடன் சீதையாக மீண்டும் வருகிறாள். சூர்ப்பனகா (ஸ்ரீ பிரியா) ராவணனிடம் அவனது மகள் வளர்ந்து பெரியவளாகிவிட்டாள் என்று கூறும்போது, அவன் அவளைச் சந்தித்து வீட்டிற்கு அழைத்து வர விரும்புகிறான். ஆனால் அடுத்து நடக்கும் சம்பவங்கள் ஒரு துரதிர்ஷ்டவசமான திருப்பத்தை எடுத்து தவறான புரிதால் காரணமாக, ராமருக்கும் ராவணனுக்கும் இடையே போர் ஏற்படுகிறது.

படம் முழுவதும், ராவணன் தனது மகளின் வாழ்க்கையில் மீண்டும் வர விரும்பும் தந்தையாக சித்தரிக்கப்படுகிறார், மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் ராவணன் ராமனை தனது அன்புக்குரியவர் என்று சொல்கிறார். இந்த படத்தின் வசனங்கள் ட்ராமா தன்மை காரணமாக, சில நேரங்களில் விஷயங்கள் வேடிக்கையாகத் தோன்றலாம். 80-களில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை இன்றைய காலக்கட்ட திரைப்படங்களுடன் மதிப்பிடுவது நியாயமற்றது, ஆனால் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட சில கிளாசிக் படங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவானது. இருப்பினும், ராவணனின் செயல்களை நியாயப்படுத்த முயல்வது படத்தின் சுவாரஸ்யம் என்று சொலல்லாம்.

ராவணன்

சமகாலத் தமிழ்த் திரைப்படத் இயக்குனரான மணிரத்னம் கூட தனது ராவணன் (2010) திரைப்படத்தில் இதேபோன்ற கருத்தைக் கொண்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி தேவ் பிரகாஷ் சுப்ரமணியத்தின் (பிருத்விராஜ்) மனைவியைக் கடத்தும் வீரா (விக்ரம்) பழிவாங்கும் கதையாக இது ராமாயணத்தை ரீமேக்காக உள்ளது. படத்தின் சீதா கேரக்டரான ராகினி சுப்ரமணியம் (ஐஸ்வர்யா ராய்) துன்பத்தில் இருக்கும் பெண்ணாக நடித்துள்ளார். வீராவின் செயல்கள் அவரது சகோதரி வெண்ணிலாவின் (சூர்ப்பனகா கேரக்டர்) (பிரியாமணி) மரணத்தால் பழிவாங்கும் உணர்ச்சியாக மாறுகிறது. ஆனால் ராகினியை கடத்தி வந்த வீரா தேவ்-வை நன்றாக பார்த்துக்கொள்கிறார்.

இந்த படத்தில் பெரும்பாலும் அழுக்கான உடையில் இருக்கும் வீரா மக்களின் அறப்போராளியாக மாறும்போது, வெள்ளை உடை அணிந்த தேவ், நீதியின் பக்கம் இருப்பவனாக செயல்படுகிறார். படத்தின் இறுதியில் தேவ் தனது மனைவியை தூண்டிலாக பயன்படுத்தி வீராவை (ராவணனை) கொள்கிறார். இப்படத்தில், ராமன் (தேவ்) வஞ்சகமானவனாக மாறுகிறான்  வாலியைக் கொல்லும் போது செய்த தந்திரத்தை போலவே இதை கையாண்டதாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். ராவணன படத்தில் ஹனுமான் கேரக்டர் கூட, வீராவுடன் பேசும் ஒரு சுயநலப் பாத்திரமாகவே நடத்தப்படுகிறது.

இருப்பினும், ராவணனுக்கும் சீதைக்கும் இடையிலான காதல் தான் படத்தின் சுவாரஸ்யம். தொடக்கத்தில் ராவணனை வெறுக்கும் சீதா பிறகு அவன் நல்ல மனதை புரிந்துகொண்டு அன்பை பொழிகிறார். ராவணன் அவளிடம் தனது உணர்வை வெளிப்படுத்தும்போது  உணர்ச்சிவசப்படுகிறார். க்ளாசான சித்தரிக்கப்பட்ட இப்படியொரு படம் இப்போது பண்ண முடியுமா என்று கேட்டால் கேள்விக்குறிதான்.

காலா

ராமாயணத்தின் மிக சமீபத்திய மற்றும் நுட்பமான திரைப்படம் காலா. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார். ராமாயணத்திலிருந்து இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதை என்றாலும் கூறடஇந்து இதிகாசத்தைப் பற்றி பல குறிப்புகள் இந்த படத்தில் உள்ளன. சந்தோஷ் நாராயணனின் அற்புதமான இசையில் “கற்றவை பட்டறை”யில் ரஜினிகாந்தின் காலா பத்து தலை ராவணன் என்று குறிப்பிடப்படுகிறது. அதேபோல் படத்தின் வில்லன் ஹரி தாதா (நானா படேகர்) கூட அவரை ராவணன் என்று குறிப்பிடுகிறது.

அதற்கு மேலாக ஒரு காட்சியில் ராவணகாவியம் என்ற தமிழ் புத்தகம் காலா மேசையில் இருப்பது போன்ற காட்சி படத்தின் அரசியலை வெளிப்படுத்தும் ஒரு காட்சியாக உள்ளது. திராவிடக் கவிஞர் புலவர் குழந்தையால் எழுதப்பட்ட இந்த புத்தகம் 1946-ம் ஆண்டு வெளியானது., இந்த புத்தகத்தில் ஆரிய மன்னனால் கொல்லப்பட்ட ராவணனை தென்னக வீரனாகக் கொண்டாடும் போது ராமனையும் அவனது குடும்பத்தையும் வில்லன்களாக சித்தரிக்கிறது.

அதேபோல் திராவிட இயக்கம் மற்றும் பெரியார் ராமாயணத்ததை பற்றி பேசியபோதெல்லாம் ராவணனின் மகிமைப்படுத்தலைக் பற்றி பேசியதை காணலாம். திராவிட கழக நிறுவனர் பெரியார், ராமாயணம் தென்னாட்டு மக்களை பேய்களாக சித்தரித்து வட இந்தியர்களை போற்றுகிறது என்று தெரிவித்திருந்தார். ராமாயணத்தைப் பற்றிய அவரது கருத்தின்படி  ராமர் ஒரு ஆரிய அரசர். அவர் தென்னாட்டு அரசரான ராவணனைக் கொன்றார். ராமாயணத்தின் இந்த விளக்கத்தின் மூலம், பெரியார் மிகவும் விவாதிக்கப்பட்ட ஆரிய-திராவிடக் கோட்பாட்டையும் வலுப்படுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ramayanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment