’இதனால தான் முதல்வன் படத்துல விஜய் நடிக்கல’ ரகசியம் உடைத்த ஷங்கர்!

‘முதல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு விஜய் முதல் தேர்வாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy Vijay, Director Shankar
இயக்குநர் ஷங்கர் – தளபதி விஜய்

Shankar, Thalapathy Vijay: இயக்குநர் ஷங்கர் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர். தனது ஈர்க்கக்கூடிய திரைப்படங்களால் பலரை ஆச்சரியப்படுத்தினார். தனது படங்களுக்கு கதாநாயகர்களை தேர்ந்தெடுப்பதில் கை தேர்ந்தவர். மேலும் பல இளம் நடிகர்கள், ஷங்கரின் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக வைத்துள்ளனர். இந்த பிரமாண்ட இயக்குநரின் படங்கள் வெகுஜன மக்களால் போற்றப்பட்டன.

ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ படம் பெரும் வெற்றி பெற்றதோடு இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது, ‘முதல்வன்’ படத்தில் நடிக்க விஜய் ஏன் மறுத்த்தார் என்ற ரகசியத்தை இயக்குனர் ஷங்கர் உடைத்துள்ளார்.

‘முதல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு விஜய் முதல் தேர்வாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பின்னர் அது கை கூடவில்லை. அதனால் இயக்குனர் தனது ‘ஜென்டில்மேன்’ ஹீரோ அர்ஜுனுடன் ‘முதல்வன்’ படத்தை இயக்கினார். அரசியல் த்ரில்லர் களத்தில் அமைந்த இந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை குவித்தது. இப்போது, ‘முதல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் ஏன் நிராகரித்தார் என்பதை சங்கர் வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் படத்திற்காக விஜய்யை நடிக்க வைக்க, ஷங்கர் தனது குருவும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தனது அஸோஸியேட் மூலமாக அணுகினாராம்.  ஆனால் இந்த பேச்சுவார்த்தை சரியாக அமையவில்லை. பின்னர் தனது மகன் சிறந்த வாய்ப்பை இழந்ததைப் பற்றி கவலைப்பட்ட, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யிடம், ஷங்கர் நேரடியாக விவாதித்திருக்க வேண்டும் என்றாராம்.

இருப்பினும் பின்னர் ஷங்கரின் இந்தி ரீமேக்கான, நண்பன் படத்தில் விஜய் நடித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் தான்!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why vijay rejected mudhalvan movie director shankar reveals the truth

Next Story
டிக் டாக், வி.ஜே… இப்போது சீரியல்: அர்ச்சனாவின் வெற்றிப் பாதை!Vijay TV Raja Rani Serial Archana
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express