scorecardresearch

முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்த நடிகரின் மனைவி: பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகர் சரவணன் மீது அவரது மனைவி முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

wife complaint against actor Saravanan
நடிகர் சரவணன் மீது மனைவி புகார்

நடிகர் சரவணின் மனைவியான சூர்யா ஸ்ரீ என்பவர் முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில், “தனக்கு விவாகரத்து கொடுக்காமல் வேறொரு பெண்ணுடன் வாழ்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சூர்யா ஸ்ரீ, “பருத்தி வீரன் படத்துக்கு முன்னர் அவரிடம் எதுவும் கிடையாது. நான் சம்பாதித்து கொடுத்த பணத்தில் அவர் பெயரில் இடம் வாங்கினேன்.

அது தான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. இந்த வீட்டுக்காக வாங்கிய கடனுக்கு தற்போதுவரை இ.எம்.ஐ தவணை கட்டி வருகிறேன். தற்போது எனது உயிருக்கு அச்சுறுததல் வந்துள்ளது.
எனக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் அதுக்கு சரவணன் தான் காரணம்” எனக் கூறினார். தொடர்ந்து தனது சொத்தை அபகரிக்க சரவணன் முயல்வதாகவும், தனக்கு முறைப்படி விவாகரத்து தராமல் வேறொரு பெண்ணுடன் வாழ்கிறார் எனவும் கூறினார்.

நடிகர் சரவணன் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Wife complaint against actor saravanan