உங்கள் படம் வெளியானால் திரையரங்குகளை கொளுத்துவோம் – ராஜமௌலிக்கு எச்சரிக்கை

மேலும் கொமராம் பீமை தவறாக சித்தகரிப்பது பழங்குடிமக்களின் உரிமைகளையும் உணர்வுகளை அவமானப்படுத்துவது ஆகும் - தெலுங்கானா பாஜக தலைவர்

By: November 2, 2020, 4:25:13 PM

Will set fire to every theatre showing RRR: BJP leader warns SS Rajamouli : எஸ்.எஸ். ராஜமௌலியின் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. RRR என்று பெயரிடப்பட்ட ரௌத்திரம் ரணம் ருதிரம் திரைப்படத்தின் கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கின்றார். சமீபத்தில் அப்படத்தின் டீசரில் ஜூனியர் என்.டி.ஆரின் கதாப்பாத்திரம் வெளியிடப்பட்டது.  அதில் தாரக் கண்களுக்கு சுர்மா பூசி, கழுத்தில் தாயத்து அணிந்து, பாரம்பரிய இஸ்லாமிய உடையில் வலம் வருகிறார். இந்த திரைப்படம் ஹைதராபாத்தின் விடுதலைக்காக உழைத்த இரண்டு பழங்குடியின தலைவர்களின் வாழ்வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநில பாஜக தலைவரும் கரீம்நகர் எம்.பியுமான பண்டி சஞ்சய் குமார் இயக்குநர் ராஜமௌலியை எச்சரித்துள்ளார். கோமராம் பீமை ஒரு இஸ்லாமியராக காட்டுவது வரலாற்றை திரிக்கும் வேலையாகும். சென்சேசனுக்காக ராஜமௌலி கொமராம் பீமின் தலையில் தொப்பி வைக்கிறார். நாங்கள் எப்படி அமைதியாக இருப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கொமராம் பீமை தவறாக சித்தகரிப்பது பழங்குடிமக்களின் உரிமைகளையும் உணர்வுகளை அவமானப்படுத்துவது. இந்த படத்தை திரையரங்கில் வெளியிட்டால் அனைத்து திரையரங்குகளையும் கொளுத்துவோம் என்றும் பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Will set fire to every theatre showing rrr bjp leader warns ss rajamouli

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X