Advertisment
Presenting Partner
Desktop GIF

குவியும் பாலியல் புகார்கள்: நான் கேரளாவில் பிறந்திருக்க விரும்புகிறேன்; பாடகி சின்மயி பேட்டி!

"பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி கேள்வி கேட்டதற்காக தனித்து விடப்பட்டேன், எனக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை என்று பாடகி சின்மயி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Chinmaiyee sripada

மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை வெளியானதில் இருந்து, முன்னணி நடிகர்கள் பலர் மீது பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில், இதை பார்த்த பாடகி சின்மயி நான் கேரளாவில் பிறந்திருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisment

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை ஒருவர் ஓடும் வாகனத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே ஆண்டு, திரைத்துறையில் நடக்கும் பாலியல் கொடுமைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்கைகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி அமைத்து கேரளா அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கையை, கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்தது.

Read In English: Wish I was born in Kerala: Playback singer Chinmayi Sripaada on aftermath of Hema Committee report

இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அறிக்கையின் ஒரு பகுதி வெளியிடப்பட்ட நிலையில், கேரளா திரைத்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஞ்சித், சித்திக் உள்ளிட்ட நடிகர்கள் மீது, காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே  தென்னிந்திய முன்னணி பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா, “கேரளாவில் உள்ள பெண்களைப் போல எனக்கு ஆதரவு அமைப்பு இல்லாததால் அவர்கள் மீது அவர்கள் மீது எனக்கு பொறாமையாக உள்ளது.  தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகள் திரைத்துறையில், பெண்களுக்கு இதுபோன்ற ஆதரவு இல்லாத நிலையில், மலையாள திரைப்படத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பாடகி சின்மயி ஸ்ரீபாதா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசினார்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கேள்வி கேட்டதற்காக நான் திரைத்துறையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டேன், யாரும் எனக்காக குரல் கொடுக்கவில்லை. அதே சமயம் 2017 ஆம் ஆண்டில் மலையாள நடிகைக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கும் சம்பவம். அதே வேளையில், மற்ற எல்லா மொழி திரைத்துறைகளிலும் பெண்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும், தொழில் அமைப்புகள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன.

"தொழில்துறை அமைப்புகள் உறுப்பினர்களை விட பெயர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிகிறது. தமிழில் சில தொழில்துறை தலைவர்கள் வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள், ஆனால் அவர்கள் தொடர்ந்து அதிகார பதவிகளை வகிக்கிறார்கள். உதாரணமாக, டப்பிங் யூனியனில், பெண்கள் ஒரு முக்கிய தொழிற்சங்கத் தலைவரின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து புகார் அளித்திருந்தனர். ஆனால் அவர்கள் வெளிப்படையாக இது பற்றி சவால் விட முடியாது. ஏனெனில் அவர்களின் வாழ்வாதாரம் அதைச் சார்ந்துள்ளது.

வலுவான அரசியல் அதிகாரம் இல்லாத மாநிலங்களில் கூட, துஷ்பிரயோகம் செய்பவர்களுக்காக பேசும் குழுக்கள் உள்ளன. கேரளாவைப் பொறுத்தவரை, பெண்கள் எப்படி ஒன்றிணைந்தார்கள் நினைத்து மிகவும் ரசிக்கிறேன். டபிள்யூ.சி.சி (“WCC (Women in Cinema Collective) கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் என் ஹீரோக்கள்; அவர்கள் ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட கோரிக்கை வைத்தனர்.  மேலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் இந்த மாதிரயான ஆதரவைப் பெற கேரளாவில் பிறந்திருக்கவே நான் விரும்புகிறேன், ”

"ஒரு மரியாதைக்குரிய மூத்தவர் கூட ஒருவரைத் துன்புறுத்தும் வாய்ப்பு கிடைத்தால், அவர் கூட அந்த வாய்பை இழக்க மாட்டார் என்று என்னிடம் ஒருவர் கூறினார். ஆனால் இந்த சம்பவங்களுக்கு அப்பால் சொல்லப்படாத கதை என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகளின் தாக்கம் - அவை எவ்வாறு நம் உடலை அழிக்கிறது, ஒருமித்த உறவுகளில் கூட ஆண்களுடன் நெருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை கெடுக்கிறது. இது உண்மையில் தாக்குதலுக்குப் பிறகு ஒரு மனிதன் உயிருள்ள சடலத்தை விட்டுச் செல்வது போன்றது.

பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை உருவாக்குகிறார்கள். திருமணத்தின் போது அல்லது ஒருமித்த உடலுறவின் போது விருப்பமில்லாத தசைச் சுருக்கங்கள் உட்பட பல பாதிப்புகள் ஏற்படுகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு பின், எந்த திசையில் இருந்து, யாரிடமிருந்து, அடுத்த தாக்குதல் வரலாம் என்று பெண்களின் வாழ்நாள் சாபம். எங்கள் அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களின், பெற்றோர்கள் கூட அவர்களை அமைதியாக இருக்கவும், வெளியே இது பற்றி பேசாமல் இருக்கவும் கூறுகிறார்கள்" ஆனால் கேரளாவில் இப்போது உருவாகி வரும் புகார்களின் வடிவத்தைப் பார்க்கும்போது, இது ஒரு தெளிவான போக்கை வெளிப்படுத்துகிறது

தொழில்துறையில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் நடுத்தர நிலைக்கு எதிராக வருகிறார்கள். செட்டில் இருந்து எந்தப் பெண்ணையும் தேர்வு செய்யக்கூடிய சூப்பர் ஸ்டார்களின் சில்மிஷங்களைப் பற்றி யார் பேசுவார்கள்?  உச்சத்தில் இருப்பவர்கள் குற்றவாளி என்று நான் உறுதியாக நம்புகிறேன், தமிழில் ஒரு பெரிய நட்சத்திரத்தை பற்றிய குற்றச்சாட்டுகள் இருந்தது. ஆனால் குற்றச்சாட்டுகள் விரைவில் திரும்பப் பெறப்பட்டன.  இது போன்ற பெயர்கள் எல்லாத் துறைகளிலும் உள்ளன. இந்த குற்றங்களை தடுக்க டபிள்யூ.சி.சி. (WCC) அமைப்பை இன்னும் அதிகப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். 

கேரளாவில் உள்ள பெண்கள், ஆண்களை குற்றம்சாட்டும் நிலையில், மலையாள நடிகைகள் மற்ற மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கில் பணியாற்றியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். டபிள்யூ.சி.சி. (WCC) மற்ற மாநிலங்களிலும் விசாரிக்க அதிகாரம் அளிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை என சின்மயி கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chinmayi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment