காதலித்து ஏமாற்றிய பிக்பாஸ் விக்ரமன்:  சாதி தொடர்பாக இழிவாக பேசியதாக பெண் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் போட்டியாளர் மற்றும் விசிக-வின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

பிக்பாஸ் போட்டியாளர் மற்றும் விசிக-வின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

author-image
WebDesk
New Update
vickraman

பிக்பாஸ் போட்டியாளர் மற்றும் விசிக-வின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

Advertisment

ஊடகத்தில் நெறியாளராக பணியாற்றிய விகரமன், தொடர்ந்து விசிக-வில் இணைந்தார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளராக அவர் பங்கேற்றார். இறுதி சுற்றில் இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும் அவர்  வெற்றி பெறாதது ஒரு பெரும் பேசு பொருளானது.

இந்நிலையில் இவர் மீது, வழக்கறிஞர் கிருபா முனுசாமி முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காதலித்து அவரை ஏமாற்றியதாகவும். சாதியை குறிப்பிட்டு இழிவுப்படுத்தியதாகவும் அவர் விக்ரமன் மீது குற்றச்சாட்டை   முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவனிடம் அவர் கோரிக்கை முன்வைத்து விளக்கமான கடிதத்தை அனுப்பி உள்ளார்.

இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “ உங்கள் கட்சியில் முக்கிய பொருப்பு வகிக்கும் விகரமனும் நானும் நட்பாக பழகி வந்தோம். நான் லண்டனுக்கு சென்ற பிறகு என்னை காதலிப்பதாக கூறினார். அவருக்கு முற்போக்கு அரசியல் பிடிக்கும் என்பதால் நானும் அவரது காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நாங்கள் காதலித்த இந்த  3 ஆண்டுகளில் மோசமான வார்த்தை பேசி விக்ரமன் என்னை  திட்டியுள்ளார்.

Advertisment
Advertisements

மேலும் எனக்கு கிடைக்க ஸ்காலர்ஷிப் குறித்தும் சாதி ரிதியாக கீழ்த்தரமான சொற்கைளை பயன்படுத்தினார். கணவன் மனைவி போல் வாழ்ந்து வருவதுபோல சூழலை உருவாக்கி என்னை அதிக பணம் செலவழிக்க வைத்தார். இதுபோல உளவியல் ரீதியாக சிக்கல் ஏற்படுத்தி உள்ளார். ஒரு உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட என்னை இதுபோன்று கீழ்தரமாக நடத்துகிறார் என்றால் மற்ற சாதாரண பெண்களின் நிலையை என்னால்  யோசித்து பார்க்க முடியவில்லை. மேலும் விக்ரமன் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன். நீங்களும் கட்சி ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கு நிற்கும் கட்சி என்பதே கேள்விகுறி ஆகிவிடும். ’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: