மனிதகுலத்தின் வாழ்விற்கும் அந்த வாழ்வை தகுதி உள்ளதாக மாற்றி காட்டியதற்கும் படைத்த இறைவனுக்கே நிகர் பெண்கள். இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல பின்பற்றப்பட வேண்டியவர்களும் கூட. இறைவன் படைப்பிலே மனஉறுதி கொண்ட உயர்வான சிற்பம் பெண்.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” இதை கூறியவர் வேறு யாருமில்லை நடிகை சுஷ்மிதா சென், உலக அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். சுஷ்மிதா சென் சொன்ன இந்த பதில் தான் அவரை உலக அழகியாக்கியது.
ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?
பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. தமிழ் சினிமாவை பொருத்தவரையில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகமானது. ஆண் இயக்குனர்களுக்கு இணையாக எத்தனையோ சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பெண் இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் அதிகம்.
சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டத்தின் பின் இருக்கும் இந்த பெண் யார் ?
கருப்பு வெள்ளை படங்கள் தொட்டு, சமீபத்தில் வெளியான கனா வரை பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்குத்தான் மவுசு அதிகம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் ஆல் டம் ஃபேவரெட்டாக இருக்கும் சில குறிப்பிட்ட படங்கள் குறித்து ஒரு அலசல்.
உங்கள் பார்வையில் பெண்மையைப் போற்றும் சிறந்த படம் எது என்பதை நீங்களே யூகிக்கலாம்.
1. அவள் ஒரு தொடர்கதை
2. மனதில் உறுதி வேண்டும் :
3. புதுமைப் பெண் :
4. கல்கி
5. கன்னத்தில் முத்தமிட்டால்
6. மொழி
7. அபியும் நானும்
8.இறுதிச் சுற்று
9. 36 வயதினிலே
10. கனா