/tamil-ie/media/media_files/uploads/2019/04/D3qEpmrW0AUQmMB.jpg)
Wrestlemania 35
பெரிய அளவில் மல்யுத்த வீரர்களுக்கு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அந்த கட் அவுட்டுக்கு முன் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ள அலை அலையாய் ரசிகர்கள் கூட்டம்.
தங்களுடைய டிக்கெட்டைப் பெற்றுக் கொண்ட அவர்களின் முகத்தில் அத்தனை எக்ஸைட்மெண்ட். இது சென்னை, வி.ஆர் மாலில் இருக்கும் பி.வி.ஆர் திரையரங்கில் நடந்தேறிய காட்சி.
ஆம், அங்கு ரெஸ்ட்ல் மேனியா 35 (WrestleMania 35) நிகழ்ச்சி திரையிடப்பட்டது. இதனை ‘#WWEKAMAHAYUDH’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா பிரைவேட் லிமிடேட், முன்னெடுத்து வருகிறது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய பெருநகரங்களில் உள்ள பி.வி.ஆர் திரையரங்குகளில் இந்த ரெஸ்ட்ல் மேனியா 35 திரையிடப்பட்டு வருகிறது.
டி.வி, ரேடியோ, பத்திரிக்கைகள், டிஜிட்டல் தளங்கள் என 360 டிகிரியிலும், மக்கள் பயன்படுத்தும் அனைத்து ஊடக தளங்களிலும் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ரெஸ்ட்ல் மேனியா 35 திரையிடப்படுவதற்கு முன் ரசிகர்களுக்கு விளையாட்டு சார்ந்த திறனறிதல் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us