இதோ வந்துட்டாருல்ல ஆதி குணசேகரன்..! எதிர்நீச்சலில் வேல ராமமூர்த்தி காட்சிகள் ஸ்டார்ட்

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து பட்டி தொட்டி எங்கிலும் பிரபலமானவர் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து பட்டி தொட்டி எங்கிலும் பிரபலமானவர் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து.

author-image
WebDesk
New Update
Vela ramamoorthi.

எதிர்நீச்சல் அடுத்து ஆதி குணசேகரன்

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. கோலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும்இந்த தொடர், பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் உள்ளிட்ட முக்கிய சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டடுள்ளது.

Advertisment

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து பட்டி தொட்டி எங்கிலும் பிரபலமானவர் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து. சினிமாவில் 2 படங்களை இயக்கியுள்ள இவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் கேரக்டர் நடிகராக சிறப்பாக நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் அவருக்கு முக்கிய பரிணாமத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனிடையே சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலின் டப்பிங்கில் இருந்த மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் எதிர்நீச்சல் சீரியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த கேரக்டருக்கு எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி சரியாக தேர்வாக இருப்பார் என்றும், சீரியல் குழு அவரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது.

சினிமாவில் வில்லத்தனம் செய்து மிரட்டி வரும் வேல ராமமூர்த்தி தற்போது எதிர்நீச்சலின் ஆதி குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்துவுக்கு பதிலாக எண்டரி ஆகியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த சீரியலின் ப்ரமோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வேல ராமமூர்த்தி நடித்துள்ள காட்சிகள் இந்த  வாரம் முதல் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: