/tamil-ie/media/media_files/uploads/2023/03/Vijayakanth.jpg)
விஜயகாந்த்
விஜயகாந்த் எவ்வளவோ நல்லது செய்த நிலையிலும், இன்று சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருவது வருத்தத்திற்கு உரியது என எழுத்தாளர் அனுபரமி கூறியுள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகையும் எழுத்தாளருமான அனுபரமி, விஜயகாந்த் தனது மண்டபத்தில் தினமும் சாப்பாடு போட்டவர். நான் ஆரம்பகட்டத்தில் திரை துறைக்கு வந்து, சாப்பிட கஷ்டப்பட்டப்போது, அவரது மண்டபத்தில் சென்றுதான் சாப்பிட்டேன்.
இதையும் படியுங்கள்: எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு; மிரட்டல் வந்தாலும் பயப்படாத கண்ணதாசன்
விஜய்காந்த் திரைதுறையினர் மற்றும் பொதுமக்களுக்கு அவ்வளவு நன்மைகளை செய்துள்ளார். அவரை சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்வது வருத்தத்திற்குரியது. இதற்கு காரணமே இந்த சமூகம் தான். கலைஞர், ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளை எதிர்த்து நின்றவர் விஜயகாந்த்.
பெரிய நடிகராக இருந்தாலும் நல்ல மனசுக்காரர், ஈகோ இல்லாதவர். அவரை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அவர் இருபெரும் கட்சிகளை எதிர்த்த பின்னரே, அவரை சிலருக்கு பிடிக்காமல் போனது. தன்னை தாழ்த்திக்கிட்டு மக்களுக்கு நல்லது செய்யணும் என நினைத்தவர் விஜயகாந்த். ஆனால் அவரை வளரவிடவில்லை.
விஜயகாந்த் நல்ல நிலையில் இருந்திருந்தால், இன்று ஏழைகள் படும் கஷ்டங்கள் அவர்களுக்கு இருந்திருக்காது. சிறந்த மனிதருக்கு இலக்கணமாக இருந்தவர் விஜயகாந்த். அவரது வாழ்க்கையை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.