லியோ படத்தில் யாரை கொல்லப் போகிறார் லோகேஷ் கனகராஜ் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு படத்திற்கு நல்லது என லியோ பட ரைட்டர் ரத்னகுமார் கூறியுள்ளார்.
மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிவர் இயக்குனர் ரத்னகுமார். மேலும், மாஸ்டர், விக்ரம், லியோ படங்களில் ரைட்டராகவும் பணியாற்றியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/d444b04e-067.jpg)
இந்தநிலையில் ரத்னகுமார் இந்தியா கிளிட்ஸ் தளத்திற்கு அளித்த பேட்டியில், லோகேஷ் கனகராஜூக்கு ஹீரோயினை கொல்வதே வேலையா போச்சு என்று ஜாலியாக கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் ரத்னகுமார், “இந்த படத்தில் விஜய் – த்ரிஷா ஜோடியாக நடிப்பது லோகேஷ் கனகராஜின் வேலையை எளிதாக்கிவிட்டது. அவர்களை ரசிகர்கள் எளிதாக குடும்பமாக ஏற்றுக் கொள்வார்கள்.
லோகேஷ் கனகராஜூக்கு ஹீரோயினை கொல்வதே வேலையா போச்சு. ஒவ்வொரு படத்திலும் முக்கிய கேரக்டரை கொன்றுவிடுகிறார். படத்தில் யாராவது லவ் பண்ணா, அந்த ஜோடியை பிரிச்சு, கொன்றுவிடுவது லோகேஷ் பாணியாக உள்ளது. இதனால் லியோ படத்தில் லோகேஷ் யாரை கொன்றுவிடுவார் என்ற பயம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த பயம் நல்லது தான். ஏனென்றால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும். இந்தப் படத்தில் உள்ள 20 முக்கிய கேரக்டரில் யாரைக் கொல்லப்போறாங்க என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.
/indian-express-tamil/media/post_attachments/ab659d5f-a80.jpg)
சில பேருக்கு ப்ரியா ஆனந்த் கேரக்டரை கொன்னுடுவாங்கனு எதிர்பார்ப்பு இருக்கு. இன்னும் படத்தில் யார் எல்லாம் நடிச்சிருக்காங்க என முழுமையாக சொல்லததால், யாரை கொல்லப்போறாங்க என்ற எதிர்பார்ப்பு நல்லது தான். படத்திற்கு மேலும் நல்ல எதிர்ப்பார்ப்பைக் கொடுக்கும்.
அதேநேரம் ரசிகர்கள் எதிர்பார்க்குறாங்க என்பதற்காக இதனை செய்யலை. கதை அது தான். கதைக்கு தேவையானது தான் செய்யப்பட்டுள்ளது. மேலும் கதையில் ஒவ்வொரு கேரக்டர் பற்றி ரசிகர்கள் கணித்து வருவதும் நல்லது தான். ஆனால், இந்தப் படம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“