இந்த பாட்டை வேற யாராவது பாடி இருந்தா இனிமை இருக்கும்; இளையராஜா பாடியதால் பாவம் சேர்ந்தது: வாலி சொல்வது எந்த பாடல்?

இன்றளவும் பலருடைய ப்ளே லிஸ்டில் இருக்கும் "ஜனனி ஜகம் நீ" பாடல் பற்றியும் இளையராஜாவின் குரலை பற்றியும் பகிர்ந்துள்ளார் கவிஞர் வாலி அவர்கள். அதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்

இன்றளவும் பலருடைய ப்ளே லிஸ்டில் இருக்கும் "ஜனனி ஜகம் நீ" பாடல் பற்றியும் இளையராஜாவின் குரலை பற்றியும் பகிர்ந்துள்ளார் கவிஞர் வாலி அவர்கள். அதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-31 190456

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த இசையமைப்பாளராகவும், மிகச் சிறந்த பாடகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இசைஞானி இளையராஜா. 5 தேசிய விருதுகளை வென்ற மாமேதை அவர். இந்திய மொழிகள் பலவற்றுள் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தமிழில் இந்த 45 ஆண்டுகளில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வெளியாகி இருந்தாலும், இசை ஞானி இளையராஜா தான் அவர்களில் எப்பொழுதும் டாப் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல.

Advertisment

1976ம் ஆண்டு வெளியான "அன்னக்கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார் இளையராஜா. இவருடைய குடும்பத்தை பொறுத்தவரை தம்பி கங்கை அமரன், மூத்த மகன் கார்த்திக் ராஜா, மகள் மறைந்த பாடகி பவதாரணி, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா என்று அனைவருமே இசைத்துறையில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைக்கனம் கொண்டவர் இளையராஜா என்று பலரும் கூறுகின்ற வேளையில், இவ்வளவு திறமையோடு உள்ள ஒரு மனிதன் கொஞ்சம் தலைகனத்தோடு இருந்தால் தான் என்ன தப்பு என்பது தான் அவருடைய ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு பாடலுக்கும் தன்னுடைய ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பை கொடுத்து இசையமைக்கும் திறன் கொண்டவர் இளையராஜா.

இந்த சூழலில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "தாய் மூகாம்பிகை". இந்த திரைப்படத்தில் அம்மனாக கே.ஆர் விஜயா நடித்து அசத்தியிருப்பார். அது மட்டுமல்ல இசை ஞானி இளையராஜாவின் அற்புதமான இசையில் இந்த திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் ஒலித்தது. 1980களின் தொடக்கத்தில் மிகச் சிறந்த இயக்குனராக வலம் வந்த சங்கரின் இயக்கத்தில் சிவப்பிரசாத் என்பவருடைய தயாரிப்பில் கார்த்திக், சிவகுமார், கே.ஆர் விஜயா, ஜெய்சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் எம்.என் நம்பியார் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். 

Advertisment
Advertisements

இந்த திரைப்படத்தில் ஒலித்தது தான் "ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ" என்கின்ற பாடல். உண்மையில் இந்த பாடலை கேட்டு கண் கலங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த பாடல். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், இளையராஜாவின் இசையும் அவருடைய குரலும் தான் என்றால் அது சற்றும் மிகையல்ல.

அதை பற்றி கவிஞர் வாலி பேசுகையில், "ராஜாவின் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது. தாய் மூகாம்பிகை படத்தில் உள்ள ஜனனி ஜனனி என்கிற பக்தி பாடலை வேறு யாரு வேண்டுமானாலும் பாடியிருக்கலாம், அது அருமையாக தான் இருந்துருக்கும். ஆனால் ராஜா பாடியதால் தான் அதில் ஒரு விதமான இயற்க்கை பாவம் இருந்தது." என்று கூறியிருந்தார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: