பாட்டு வேண்டாம், வெறும் ஹம்மிங் மட்டுமே கொடுத்து பிரபலமானவர்... இவருக்கு வரிகளே தேவை இல்ல; வாலியை அசத்திய பாடகி!

காலையோ, மாலையோ எல்ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் தான் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. அவர் பாடும் ஹம்மிங் பற்றி எழுத்தாளர் வாலி என்ன கூறியுள்ளார் என்று பார்ப்போம்.

காலையோ, மாலையோ எல்ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் தான் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. அவர் பாடும் ஹம்மிங் பற்றி எழுத்தாளர் வாலி என்ன கூறியுள்ளார் என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
vaali

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்தும் எல்ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் அம்மன் கோவில்களில் ஒலித்து வருகிறது. இந்த நிலையில் தன்னால் முடிந்ததை அம்மனுக்கு செய்திருக்கிறேன், ஆயுள் உள்ளவரை அம்மனுக்காக பாடுவேன் என கூறி நெகிழ வைத்து இருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.

Advertisment

தமிழ் மாதங்களில் கார்த்திகை, மார்கழி, தை, புரட்டாசி மார்கழி என இறைவனுக்கு உகந்த மாதங்கள் பல இருந்தாலும் ஆடி மாதம் எப்போதுமே தமிழர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற பக்தர்களுக்கு மிக நெருக்கமானது.

ஆனால் இவர் தமிழ் திரையிசை உலகில் ஒரு புகழ்பெற்ற பின்னணிப் பாடகி. அவர் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக, "பட்டத்து ராணி" பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று. அவர் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 

எல்.ஆர்.ஈஸ்வரி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, துளு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். 1958 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடி வருகிறார். "பட்டத்து ராணி" பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியுள்ளார். மேலும், "கற்பூர நாயகியே", "செல்லாதா", "மாரியம்மா" போன்ற பக்திப் பாடல்களும் அவர் பாடியுள்ளார். திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி விருதை வென்றுள்ளார். 

Advertisment
Advertisements

எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் கவிஞர் வாலி இருவரும் இணைந்து பல பாடல்களுக்கு பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, "கலாசலா" பாடல் போன்ற ஹிட் பாடல்கள் இவர்களின் கூட்டணியில் உருவானவை. வாலி, ஈஸ்வரியின் குரலைப் பாராட்டியதுடன், சில பாடல்களை அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். 

"பாடல் ஒன்று த ஆவதற்கு வெறும் இசையும் வரிகளும் போதாது, அதற்க்கு ஒரு அருமையான குறை தேவை, அது தான் உங்கள் குரல்" என்று ஈஸ்வரியை எழுத்தாளர் வாலி புகழ்ந்து பேசியுள்ளார். 

"நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அலையமணி படத்தில் வரும் பாடல் ஆகட்டும், பவளக்கொடியிலே என்ற பாடலாகட்டும், இரண்டும் ஹிட் ஆனதற்கு காரணமே உங்கள் ஹம்மிங் தான். ஹம்மிங் மட்டுமே வைத்து ஹிட் ஆகிய ஒரே சிங்கர் நீங்கள் தான்" என்று மேலும் புகழ்ந்து பேசியுள்ளார் அவர். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: