/indian-express-tamil/media/media_files/2025/09/06/screenshot-2025-09-06-193651-2025-09-06-19-37-11.jpg)
எம்ஜிஆர் எனும் 3 எழுத்து மந்திரம் 1950 ஆம் ஆண்டு தொடங்கி 1977 ஆம் ஆண்டு அவரை திரையுலகிலும், 1960 முதல் 1987 ஆம் ஆண்டு அவர் மறையும் வரையில் அரசியலிலும் மக்கள் மனதில் உச்சரிக்கும் மந்திரச்சொல்லாக இருந்தது. அரசியலிலும் திரையிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்ஜிஆர் ஜன 17 அன்று பிறந்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கையில், கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 17.1.1917 அன்று கோபாலன் மேனன் சத்யபாமா தம்பதியருக்கு 5வது மகனாக பிறந்தார். தமது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த்திரைப்பட உலகின் முடிசூடா மன்னராக விளங்கினார்.
கலைஞர் 1950ஆம் ஆண்டு திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி மற்றும் மந்திரிகுமாரி திரைப்படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நடித்த சிறந்த திரைப்படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா. எம்.ஜி.ஆரை 'இதயக்கனி' என்று அழைத்தார். நாளடைவில் அனைத்து தரப்பு மக்களாலும் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்டார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953 ஆம் ஆண்டு தம்மைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். தாம் நடித்த திரைப்படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். 1962ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை வகித்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். அன்னாரின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, 1988 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான 'பாரதரத்னா' விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும், அன்னாரைப் பெருமைப்படுத்துகின்ற வகையில், கலைஞர் 17.1.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார்.
அப்படி பட்ட அவருக்கு பிடித்தமான பாடல்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி ஒரு நேர்காணலில் கவிஞர் வாலி பேசியுள்ளார். அவர் பேசுகையில், "அவருக்கு இசையை பற்றி நன்கு தெரியும். நல்ல இசையை மட்டுமே ஆதரிப்பவர் அவர். அவர் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கும் பாடல்கள் இரண்டு உள்ளது. அதில் ஒன்று 'இதயக்கனி' படத்தில் இருந்து 'இதழே இதழே தேன் வேண்டும் மற்றொன்று 'புத்தம் புதிய புத்தகமே....' என்ற பாடல்கள் தான். இதை ரசித்து பாடுவார் அவர். இன்னும் ஒன்று உள்ளது அது தான், 'பருவம் போன பாதையிலே...' என்ற பாடல். அது மிகவும் அற்புதமான பாடல் என்று சொல்லி அடிக்கடி பாடுவார்." என்று கவிஞர் வாலி பேசியபோது கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.