/indian-express-tamil/media/media_files/2025/09/13/yuga-2025-09-13-15-43-42.jpg)
14 வயதில் வந்த எச்சரிக்கை கடிதம்; லவ் லெட்டரே எழுத முடியாம போச்சு: யுகபாரதி பெயர் காரணம் சொன்ன கவிஞர்!
பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான யுகபாரதி ’ஆனந்தம்’ படத்தில் இடம்பெற்றிருந்த ’பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். பிரேம்குமார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் யுகபாரதி என்ற பெயரில் பாடல்கள் எழுதி வருகிறார்.
பாடலாசிரியர் யுகபாரதி பத்திரிகைகளில் பல கவிதைகள் எழுதியுள்ளார். ஆனந்தம் படத்திற்கு பிறகு இவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இதையடுத்து, ‘மைனா’ திரைப்படம் யுகபாரதி கெரியருக்கு மிகப்பெரும் மையில்கல்லாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ’மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’, ’சிங் சிக்கா’ பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
அதன் பிறகு ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினிமுருகன்’, ’றெக்க’, ’கும்கி’, ’கயல்’, ’விஸ்வாசம்’, ’அண்ணாத்த’, ’வெள்ளைக்கார துரை’, ’மருது’ உள்ளிட்ட பல படங்களில் மக்கள் கொண்டாடும் பாடல்களை கொடுத்திருந்தார். பல இசையமைப்பாளர்களுடன் யுகபாரதி பணியாற்றி இருந்தாலும் இமான் - யுகபாரதி கூட்டணி என்றும் தனித்துவமாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய யுகபாரதி தனது பெயர் காரணம் குறித்த சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “யுகபாரதி என்ற பெயர் 14 வயதில் இருந்து உள்ளது. இது புனைப்பெயர் இல்லை என் அம்மா வைத்த பெயர். 35 வருடங்களுக்கு முன்பு கவிஞர் பிரேம் குமார் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.
நான் முத்துகுமாரிடம் கேட்பேன் முத்துகுமார் என்று எப்படி ஒரு கவிஞன் இருக்க முடியும். ஒரு பாரதிதாசன், பாரதி, சுரதா என்று தானே கவிஞர்கள் இருக்க முடியும் என்று கிண்டல் செய்திருக்கிறேன். அதுனால் அந்த வயதில் புனைப்பெயர் வைத்தால் தான் கவிதை வரும் என்று வைத்த பெயர் தான் யுகபாரதி. முன்பு பாரதி வசந்தன் என்ற பெயரில் ஒரு பத்திரிக்கைக்கு என் படைப்பை அனுப்பினேன்.
நான் அனுப்பிய என் படைப்பும் பிரசூரமாகிவிட்டது. அப்போது வாசகர் கடிதம் ஒன்று வந்தது. அதில் பாரதி வசந்தன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக படைப்புகளை எழுதிக் கொண்டிருக்கேன். நான் ஒரு எழுத்தாளர் மற்றும் ஆய்வாளரும் கூட. என்னுடைய பெயரை சுரண்டி நீங்கள் இப்படி எழுதுவது மிகப்பெரிய குற்றம். அதனால் அந்த பெயரை மாற்ற வேண்டும் என்று எழுதி இருந்தார்.
அதை என் அம்மாவிடம் கூறினேன். அவர் நீ பாரதினு வசிக்கோ அதுடன் வேறு எதுவும் பெயரை சேர்த்துக் கொள் என்றார். அப்படி வந்தது தான் இந்த யுகபாரதி பெயர். இந்த பெயர் செண்டிமெண்டாக இருந்ததால் அதே பெயரில் படைப்புகளை எழுத ஆரம்பிட்டேன்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.