காலா டிக்கெட் விலை குறித்து பரவும் செய்தி பொய்யானது! – வுண்டர்பார் நிறுவனம் விளக்கம்

அதிக கட்டணம் வசூலிக்கச் சொன்னதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை (ஜூன் 7) ரிலீசாக உள்ளது. பல தடைகளை கடந்து நாளை இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், சென்னையில் கமலா மற்றும் உதயம் திரையரங்கில், “காலா பட விநியோகஸ்தர்கள் அதிக விலைக்கு டிக்கெட் விற்கச் சொல்வதால், நாங்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. காலாவுக்கு பதில் ஜூராசிக் வேர்ல்டு படம் திரையிடப்படும்’ என அந்தந்த திரையரங்க உரிமையாளர்கள் கூறியதாக சமூக தளங்களில் தற்போது செய்தி பரவி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், தனுஷின் வுண்டர்பார் நிறுவனம், இந்த தகவல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து வுண்டர்பார் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மற்ற திரையரங்குகளிடம் போட்ட ஒப்பந்தத்தை போல, கமலா மற்றும் உதயம் திரையரங்குகளிடம் போட்ட ஒப்பந்தத்திற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதிக கட்டணம் வசூலிக்கச் சொன்னதாக பரவும் தகவல் முற்றிலும் பொய். ஆதாரமற்றவை” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Wunderbar clarifies about high rate ticket for kaala

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com