/tamil-ie/media/media_files/uploads/2018/06/yaar-ivargal-poster.jpg)
yaar ivargal poster
சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில், வெகுநாட்களாகவே ‘யார் இவர்கள்’ என்ற போஸ்டரை நம்மாள் பார்க்க முடிந்தது. பலரும் அதைப்பார்த்துக் குழம்பியிருந்த தருணத்தில், அதற்கான விடையை இன்று அளித்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
சாமுராய், காதல், வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது ரா ரா ராஜசேகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முன்பே ‘யார் இவர்கள்’ என்ற படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் பாலாஜி சக்திவேல்.
இயக்குநர் பாலாஜி சக்திவேலின் திரைப்படங்கள் அனைத்துச் சமூக பிரச்சனைகள் சார்ந்ததாகவே உள்ளது. இம்முறையும் அந்தப் பாதையில் இருந்து சற்றும் விலகாமல், மற்றொரு சமூக பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளார். ‘யார் இவர்கள்’ படத்தின் டீசரை இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளனர்.
June 2018#YaarIvargalTeaser@DirBalajiSakthi@ChandaraaArts@vijaymilton@essakikarthik@bharath_seeni@kishore_esakki@AJKAYhere@SubikshaOffl@RamSwamy2110@RoughNote_Pro@javeddriaz@gopiprasannaa@onlynikil@thinkmusicindia#CtcMediaboyhttps://t.co/M0x757xXOR
— A.R.Murugadoss (@ARMurugadoss)
#YaarIvargalTeaser@DirBalajiSakthi@ChandaraaArts@vijaymilton@essakikarthik@bharath_seeni@kishore_esakki@AJKAYhere@SubikshaOffl@RamSwamy2110@RoughNote_Pro@javeddriaz@gopiprasannaa@onlynikil@thinkmusicindia#CtcMediaboyhttps://t.co/M0x757xXOR
— A.R.Murugadoss (@ARMurugadoss) June 7, 2018
தமிழகத்துக்கு வேலைக்காக வரும் வெளிமாநில இளைஞர்களைக் காவல்துறையினர் கையாளும் விதம், மாணவ பருவத்தில் ஏற்படுகிற பிரச்சினைகள் குறித்த காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளன. அத்துடன், எங்களை அடக்க நினைப்பது அதிகாரமா? ஆணவமா? உலகத்தில் அநீதி கண்டு குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்களே போன்ற புரட்சிகர வசனங்களும் பேசுகிறது இந்த டீசர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.