'பிளவுஸ் தைக்கக் கூட நேரம் இல்லை': அவசரமாக நடைபெற்ற சீரியல் நடிகை திருமணம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென நடிகை நட்சத்திராவுக்கும் அவரது காதலர் விஸ்வாவுக்கும் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென நடிகை நட்சத்திராவுக்கும் அவரது காதலர் விஸ்வாவுக்கும் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

author-image
WebDesk
New Update
'பிளவுஸ் தைக்கக் கூட நேரம் இல்லை': அவசரமாக நடைபெற்ற சீரியல் நடிகை திருமணம்

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை தனக்கு திருமணம் அவசரமாக நடந்ததாகவும், பிளவுஸ் தைக்க கூட நேரம் இல்லை இதனால் நண்பர்களையும் அழைக்க முடியவில்லை என்று வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி. ஸ்ரீகுமார் சைத்ரா ரெட்டி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இந்த சீரியலில் நாயகி வெண்ணிலாவாக நடித்து பிரபலமானவர் நட்சத்திரா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது ஸ்ரீகுமார் சன்டிவியின் வானத்தைப்போல சீரியலிலும், சைத்ரா ரெட்டி சன்டிவியின் கயல் சீரியலிலும் நடித்து வரும் நிலையில். நட்சத்திர தற்போது வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதனிடையே நட்சத்திராவுக்கும். சீரியலில் அவருடன் பணியாற்றய விஸ்வா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.  

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென நடிகை நட்சத்திராவுக்கும் அவரது காதலர் விஸ்வாவுக்கும் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. மேலும் இது யாருக்கும் தெரியாத ரகசிய திருமணம் என்றும் கூறப்பட்ட நிலையில். திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Advertisment
Advertisements

இதனிடையே தனது திருமணம் குறித்து நடிகை நட்சத்திரா வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் தற்போது தனது தாத்த வீட்டில் இருப்பதாகவும், தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவர் தனது திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், அவசர அவசரமாக எனது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது  

இதனால் எனது நெருங்கிய நண்பர்களை கூட திருமணத்திற்கு அழைக்க முடியவில்லை. திருமணத்திற்கு என்கு பிளவுஸ் தைக்க கூட நேரம் இல்லை. என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. விஷ்வா - நட்சத்திரா திருமணம் அவரது குலதெய்வம் கோயிலில் நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Yaaradi Nee Mohini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: