‘அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு’ தல பாட்டுக்கு குத்தாட்டம் ஆடிய யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பள்ளி விழாவில் மேடையில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் அடிச்சிதூக்கு... அடிச்சிதூக்கு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பள்ளி விழாவில் மேடையில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் அடிச்சிதூக்கு... அடிச்சிதூக்கு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
yashika aannand, yashika aannand dances at school function stage, யாஷிகா ஆனந்த், யாஷிகா ஆனந்த் டான்ஸ், யாஷிகா ஆனந்த் குத்தாட்டம், வைரல் வீடியோ, yashika aannand dances for adichu thookku song, actress yashika aannand dance, viral video

yashika aannand, yashika aannand dances at school function stage, யாஷிகா ஆனந்த், யாஷிகா ஆனந்த் டான்ஸ், யாஷிகா ஆனந்த் குத்தாட்டம், வைரல் வீடியோ, yashika aannand dances for adichu thookku song, actress yashika aannand dance, viral video

நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பள்ளி விழாவில் மேடையில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் அடிச்சிதூக்கு... அடிச்சிதூக்கு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

Advertisment

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதையடுத்து, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார். யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கவர்ச்சிப் புயலாக வலம் வந்தார்.

Advertisment
Advertisements

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிக்குப் பிறகு யாஷிகா ஆனந்த் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். யாஷிகா சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கிரங்கடிக்கும்படியான தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

யாஷிகா ஆனந்த் சமூக ஊடகங்களில் பதிவிடும் புகைப்படங்களைக் கொண்டாடவே ஒரு ரசிகர் பட்டாளம் சமூக ஊடகங்களில் உள்ளது.

இந்த நிலையில், அண்மையில் ஒரு தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட யாஷிகா, விழா மேடையில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற மாஸ் பாடலான அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.

யாஷிகா ஆடிய டான்ஸ் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி உள்ளது. இதனிடையே, தன்னை விழாவுக்கு அழைத்த பள்ளிக்கு யாஷிகா ஆனந்த நன்றி தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Yashika Tamil Cinema Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: