scorecardresearch

முதுகில் குத்திவிட்டார்; மனம் காயப்பட்டு விட்டது: யாஷிகா- நிரூப் பிரேக் அப் சர்ச்சை

”பிரேக் கப்புக்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். ஆனால், அதில் மிக முக்கியமானது என் மனம் காயம் பட்டது தான்” என்று நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்திருக்கிறார் .

முதுகில் குத்திவிட்டார்; மனம் காயப்பட்டு விட்டது: யாஷிகா- நிரூப் பிரேக் அப் சர்ச்சை

”பிரேக் கப்புக்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். ஆனால், அதில் மிக முக்கியமானது என் மனம் காயம் பட்டது தான்” என்று நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்திருக்கிறார் .

துருவங்கள் 16 படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் யாஷிகா ஆனந்த். இதைத்தொடர்ந்து அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திலும், நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டது, இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் தற்போது எஸ் ஜே சூரியாவுடன் இவர் நடத்திருக்கும் திரைப்பட வெளிவர இருக்கிறது. இந்நிலையில் கடந்த வருடம் விபத்து ஒன்றில் கடுமையாக காயமடைந்தார். அதிலிருந்து மீண்டு வரவே இவருக்கு அதிக நாட்கள் ஆனது. இதைத்தொடர்ந்து உடல் நலம் பெறும் தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது முன்னாள் காதலன் நிரூப் உடன் இருவருக்கு மன முரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக பேசிய அவர் ”நான் சொன்ன டயலாக்கை அவருடைய சொந்த டயலாக் போல் பேசி இருக்கிறார். பாய் பிரெண்ட், கேர்ள் பிரெண்ட்டாக இருப்பதெல்லாம் லவ் கிடையாது. முதுகில் குத்தினாலும் அவர்கள் லவ் செய்துவிட்டுப் போக வேண்டும். பிரேக் கப்புக்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். ஆனால், அதில் மிக முக்கியமானது என் மனம் காயம் பட்டது தான் ”என்று யாஷிகா ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Yashika anand about her breakup