விபத்தில் சிக்கிய பிக் பாஸ் யாஷிகாவுக்கு அடுத்தடுத்து சர்ஜரி; தங்கை ஓஷீன் ஆனந்த் தகவல்

தற்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா சுயநினைவுடன் உள்ளார். பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அடுத்தடுத்து அறுவை சிசிச்சை நடைபெற உள்ளது. யாஷிகாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஓஷீன் குறிப்பிட்டுள்ளார்.

yashika anand health conditions, actress yashika anand, yashika anand car accident, yashika anand surgery, யாஷிகா ஆனந்த், யாஷிகா ஆனந்த் கார் விபத்து, யாஷிகா ஆனந்த் உடல்நிலை, ஓஷீன் ஆனந்த், yashika anand sister osheen anand, osheen anand says yashika anand's health conditions, tamil cinema news, tamil cinema updates

தமிழ் சினிமாவில் இளம் நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயம் காயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் யாஷிகாவுக்கு அடுத்தடுத்து சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய சகோதரி ஓஷீன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 2018ம் ஆண்டில் யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் ஜூலை 24ம் தேதி நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்று கொண்டிந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளானது. அதில், யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கார் விபத்தில் யாஷிகாவுக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், யாஷிகாவின் தங்கை ஓஷீன் ஆனந்த் தனது சகோதரி யாஷிகாவின் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ளார். யாஷிகா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. யாஷிகாவுக்கு நேற்று மேலும் ஒரு அறுவை சிகிச்சையும் நடந்தது. கடவுள் அருளால், சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

தற்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா சுயநினைவுடன் உள்ளார். பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அடுத்தடுத்து அறுவை சிசிச்சை நடைபெற உள்ளது. யாஷிகாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஓஷீன் குறிப்பிட்டுள்ளார்.

ஓஷீன் ஆனந்த், தனது சகோதரி யாஷிகாவுக்கு இதுவரை எத்தனை அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்பதை தெரிவிக்கவில்லை. இருப்பினும், யாஷிகா தொடர்ந்து ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், யாஷிகாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Yashika anand health conditions many surgeries done her sister osheen reports

Next Story
ஒரு வருடத்தில் அடி வாங்கிய வனிதா : களத்தில் இறங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவாளர்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com