’குழந்தை இல்லாத பெண்ணின் வலி…’: ஸ்ரீபிரியாவின் யசோதா குறும்படம்

“குழந்தை இல்லாத பெண்ணின் வலி வெளியில் அமைதியானது, உள்ளே அவளுக்கு புயல் போன்றது”

Tamil Shortfilms, Sripriya Yasodha Shortfilm
Tamil Shortfilms, Sripriya Yasodha Shortfilm

நடிகை ஸ்ரீபிரியா எழுதி, இயக்கியிருக்கும் ‘யசோதா’ எனும் குறும்படம் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. கமீலா நாசர் மற்றும் ‘சிங்கக்குட்டி’ புகழ் நடிகர் சிவக்குமார் (சிவாஜி தேவ்) ஆகியோர் இதனை இணைந்து தயாரித்துள்ளார். மேலும் இதில் ஸ்ரீபிரியா, நாசர், சிவக்குமார் மற்றும் சில சீரியல் நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தக் குறும்படம் முழுவதுமாக மொபைலில் படமாக்கப்பட்டுள்ளது.

பாண்டவர் இல்லம்: தாத்தா கேட்டாரு பாருங்க நச்சுன்னு ஒரு கேள்வி..!

இதற்கு பாடகர்-நடிகர் க்ரிஷ் பின்னணி இசையமைக்க, பாடல்களை நிருத்யா பிள்ளை பாடியுள்ளார். மேலும், இந்த குறும்படத்தை ஆண்டனி எல். ரூபன் தொகுத்துள்ளார்.

முன்னதாக இந்த குறும்படத்தின் முதல் தோற்றத்தை ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் வெளியிட்டார், பின்னர், ‘யசோதா’வின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை ஷ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். குழந்தை இல்லாத ஒரு பெண்ணின் வலி நிறைந்த பக்கங்களை உணர்வுப்பூர்வமாக இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது.

’இந்த தொழில்நுட்பம் ரொம்ப முக்கியம்’: அஜித் மற்றும் தக்‌ஷா குழுவை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்

”யசோதா குறும்படத்தைப் பார்த்ததும் கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. குழந்தை இல்லாத பெண்ணின் வலி வெளியில் அமைதியானது, உள்ளே அவளுக்கு புயல் போன்றது” என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.

’சரியான நேரத்தில் சரியான செய்தி’ என இந்தப் பயனர் குறிப்பிட்டுள்ளார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Web Title: Yasodha shortfilm sripriya nasser shivakumar behindwoods release

Next Story
விஜய் திரைப்படம் டூ சின்னத்திரை பயணம்… நடிப்பில் ஸ்ருதியை அடிக்க ஆளே இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com