/indian-express-tamil/media/media_files/2025/09/22/sarwanath-2025-09-22-20-10-20.jpg)
கல்யாணம் ஆகி 2 ஆண்டில் மனக்கசப்பு: மனைவியை விவாகரத்து செய்யும் 'எங்கேயும் எப்போதும்' பட நடிகர்?
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சர்வானந்த். இவர் தமிழில் ’காதல்னா சும்மா இல்ல’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் மூலம் பிரபலமானார்.
இதையடுத்து, சேரன் இயக்கிய ’ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, கணம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் நடித்த கணம் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சர்வானந்த் கடந்த 2023-ஆம் ஆண்டு தன் காதலியான ரக்சிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள லீலா பேலஸ் அரண்மனையில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னணி திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நடிகர் சர்வானந்த் - ரக்சிதா தம்பதியினர் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருமணமான இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தா? என்று கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக சர்வானந்தும் அவரது மனைவி ரக்சிதா ரெட்டியும் ஒன்றாக வாழவில்லை என்று செய்திகள் பரவி வருகின்றன. இதனால் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று சர்வானந்தின் உறவினர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சர்வானந்த் தனது அடுத்த படமான 'ஸ்ரீராம் ஆதித்யா' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் என்றும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவதன் காரணமாக இருவரும் இரண்டு வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இருவருக்கும் விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சமீபகாலமாக திரைப்பிரபலங்கள் விவாகரத்து செய்வது ட்ரெண்டாகி வருகிறது. திருமணமான ஒரு வருடத்தில் விவாகரத்து, இரண்டு வருடத்தில் விவாகரத்து என்று பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சர்வானந்த் இடம்பெறவுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.