/tamil-ie/media/media_files/uploads/2018/09/yogi-babu-1.jpg)
yogi babu, யோகி பாபு
காமெடியன் யோகி பாபு அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று சுற்றி வந்த வதந்திகளுக்கு வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவர்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யோகி பாபு:
ஒவ்வொரு காமெடி நடிகருக்கும் ஒவ்வொரு சீசன் இருக்கும். அதன்படி தற்போது யோகிபாபு சீசன். விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும் இவர் தான் காமெடியன்.
இந்நிலையில் இவர் காமெடியையும் தாண்டி டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சில நாட்களாக உலா வந்தது. மேலும் அவர் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பாராம் என்றும் கூறிவந்தனர்.
I Am Not Doing a " Hero Role "
Says - @iYogiBabu#yogibabupic.twitter.com/rPoSgjHK5C
— SHARAN FX (@FXSHARAN)
I Am Not Doing a " Hero Role "
— Sharan Fx (@FXSHARAN) September 10, 2018
Says - @iYogiBabu#yogibabupic.twitter.com/rPoSgjHK5C
ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள யோகிபாபு, என் மூஞ்சியெல்லாம் காமெடிக்கு தான் செட் ஆகும், ஹீரோக்கான முகமில்லை, அதற்கான தகுதியும் எனக்கில்லை என கூறியுள்ளார்.
சிலரை போல ஏடாகூடாமாக செய்யாமல், தனக்கு என்ன வரும் என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார் என ரசிகர்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us