/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1283.jpg)
gurkha full movie download, gurkha movie tamilrockers, கூர்கா ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ், yogi babu
Yogi babu’s gurkha full movie leaked to free download in tamilrockers website: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ஒரு வாரத்திற்கு நான்கு படங்கள் வெளியாகிறது எனில், அதில் 2 படங்களில் தான் இருப்பதை அவர் நினைத்தாலும் தடுக்க முடியாத அளவுக்கு, வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், லீட் ரோலில் யோகி பாபு நடித்து, நேற்று(ஜூலை.12) கூர்கா திரைப்படம் வெளியானது.
சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், மனோபாபு, சார்லி, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், ராஜ்பரத், எலிசா எர்கார்ட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க - தமிழ் ராக்கர்ஸில் ‘லீக்கான’ வெண்ணிலா கபடி குழு 2!
சமகால அரசியலையும், சினிமா பிரபலங்களையும் பகடி செய்யும் வகையில் உருவாகியுள்ள இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 300 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் லீக் செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.