நகைச்சுவை நடிகர் யோகி பாபு தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் படு பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் மஞ்சு பார்கவியை திருமணம் முடித்த அவர், தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். நிறைய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு, இறுதியாக சந்தானத்தின் ‘டகால்டி’ படத்தில் நடித்திருந்தார்.
குட்டி தேவதை படத்தின் ‘தாமரைப்பூ சிரிப்புல’ பாடல் வீடியோ
யோகி பாபுவின் திருமண செய்தி பிரபலங்களை மட்டுமல்ல, அவரது ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. அவரின் தீவிர ரசிகையான சுஜி பிரதீபா, எப்போதும் யோகிபாபுவை பின்னணியில் வைத்து டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் யோகி பாபுவின் திருமண செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், காதலில் தோல்வியுற்றவரைப் போல் வீடியோ பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
@sujipradeepa♬ original sound – M.S.P
அஜ்மீர் தர்கா ‘உருஸ் விழா’: புனித போர்வை வழங்கினார் பிரதமர் மோடி
இதைக் கவனித்த யோகி பாபு, இதுபோன்ற வீடியோக்களில் கவனம் செலுத்த வேண்டாம் எனவும், இது இருவரின் எதிர்காலத்திற்கும் இடையூறு விளைவிக்கும். மக்கள் இதனை தவறாக புரிந்து கொள்ளக்கூடும் என்றும் அவர் கூறினார். தற்போது இதற்கு விளக்கமளித்து, சுஜி பிரதீபா வேறொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தவறாக புரிந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டதோடு, யோகி பாபுவின் திருமணத்தால், தான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதையும் கூறியுள்ளார். தான் அவரின் தீவிர ரசிகை என்றும், மற்றபடி அவரை காயப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.