/tamil-ie/media/media_files/uploads/2018/12/YOGI-BABU.jpg)
YOGI BABU, யோகி பாபு
அண்மைகாலமாக அணைத்து தரப்பினரையும் கவர்ந்த நடிகர் என்றால் அது நம்ம நகைச்சுவை நடிகர் யோகி பாபு.
திரையில் வந்து அவர் நின்றாலே போதும் சிரிக்காதவர்களும் சிரித்துவிடுவார்கள். காமெடிக்கு போடியாக சூரி, சதிஷ், கருணாகரன் என சிலர் இருந்தாலும் யோகியின் காட்டில் தான் இந்த வருடம் மழை. அதிலும் முக்கியமாக அஜித்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் சர்கார், சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, சூர்யாவுடன் தானா சேந்த கூட்டம் என படங்களில் நடித்துள்ளார்.
2018 ஆண்டில் யோகி பாபு படங்கள்
அதிலும் கோலமாவு கோகிலா படம் தான் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. இப்படத்தில் அவர் நயன்தாரா மீது காதல் கொள்ளும் கல்யாண வயசு பாடலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாத என்று சொல்லலாம்.
இந்த 2018 ஆண்டில் அவர் நடித்த படங்களின் மொத்தம் எண்ணிக்கை 20. அந்த படங்களின் விபரங்கள்.
- சர்கார்
- சீமராஜா
- பில்லா பாண்டி
- குலோபகாவாலி
- காளி
- ஜூங்கா
- வீரா
- தானா சேர்ந்த கூட்டம்
- எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
- செம
- செம போத ஆகாத
- ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல
- பரியேறும் பெருமாள்
- சிலுக்குவார்பட்டி சிங்கம்
- ஒரு குப்பை கதை
- கலகலப்பு 2
- மன்னர் வகையறா
- காற்றின் மொழி
- மோகினி
- கோலமாவு கோகிலா
2018 ஆண்டில் 20 படங்கள் – நடிகர் யோகி பாபு சாதனை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.