Advertisment

பாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு: அமீர் கானோடு முதல் படம்!

Yogi Babu's Bollywood Entry: இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
yogi babu teaming up with aamir khan

YOGI BABU, யோகி பாபு

Yogi Babu Teaming up with Aamir Khan: பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தயோகி பாபு ’யாமிருக்க பயமேன்’ படத்தில் ’பன்னி மூஞ்சி வாயா’ வேடத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நகைச்சுவை நடிகராக மாறி விட்டார். தற்போது அவர், 'பன்னி குட்டி', 'மண்டேலா', மற்றும் 'பப்பி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார் யோகி பாபு. அதாவது பாலிவுட் நடிகர் அமீர் கான் தற்போது ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தை ரீமேக் செய்து நடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் அதில் கையெழுத்திட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் யோகி பாபு.

விஜய் சேதுபதி நடிப்பதால், அவருடன் காமெடி வேடத்தில் யோகி பாபு நடிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Vijay Sethupathi Aamir Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment