மனைவியுடன் யோகிபாபு… பார்க்கவே எவ்வளவு நல்லா இருக்குல!

மொத்த குடும்பத்தினரும் அக்கறையுடன் கவனித்துக் கொள்பவராக இருக்கிறாராம்.

By: Updated: July 3, 2020, 02:41:35 PM

yogi babu wife : தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் தலைமுறைக்கு பின்னர் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருவது நடிகர் யோகிபாபு தான். ஆரம்பத்தில் ஒரு சில துணை தான். கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 19 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு. கடந்த ஆண்டு வரை பேச்ளராக சுற்றிதிரிந்து வந்த யோகிபாபுக்கு திடீரென்று கால் கட்டு போடப்பட்டது. மஞ்சு பார்க்கவியை யோகி பாபு கரம் பிடித்தார்.

சந்திக்காத கஷ்டங்களே இல்லை… சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்ற ரியோ ராஜ்!

ஆரம்பத்தில் யோகிபாபுக்கு திருமணம் என்ற வதந்தி தான் பரவியது. சில நாட்களில் அந்த வதந்தி நிஜமானது. மிகவும் எளிமையாக எந்தவித ஆடம்பரமும் இன்றி யோகிபாபு திருமணம் கோயிலில் நடைப்பெற்றது. மார்ச் மாதம் சென்னை திருமண வரவேற்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா , ஊரடங்கு என அடுத்தடுத்த நிகழ்வுகளால் வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி போகியது.

தனது ம்னைவி மஞ்சு பற்றி பத்திர்க்கை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த யோகிபாபு,. “ வீட்டில் எல்லோரும் சேர்ந்து பார்த்த பெண் தான், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எனக்கு மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கிற அனைவருக்கும் பிடித்துவிட்டது. எனக்கு மனைவியாக வரப் போகிறவர்கள் என்னை மட்டுமில்லாமல் அம்மா தங்கை என்று என் மொத்த குடும்பத்தினரும் அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். அதனால் தான் மஞ்சுவை தேர்ந்தெடுத்தேன்” என்றார்.

 

தற்போது ஊரடங்கினால் வீட்டில் இருக்கும் யோகிபாபு தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிடுகிறார். தன்னை போலவே அனைவரும் வீட்டில் இருப்பது நல்லது என்ற விழிப்புணர்வு வீடியோவைவும் யோகி பாபு வெளியிட்டிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Yogi babu wife actor yogi babu wife yogi babu marriage yogi babu wife manju bhargavi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X