/tamil-ie/media/media_files/uploads/2019/11/yogibabu.jpg)
Yogibabu Sabitha Rai marriage controversy
Yogibabu Sabitha Rai marriage controversy : யோகி பாபு ஒரு படத்தில் இருந்தால் நம்பி தைரியமாக படம் பார்க்க செல்லலாம் என்ற நம்பிக்கை அனைவருக்குமே இருக்கிறது. நயன்தாரா, யாஷிகா என முக்கிய நட்சத்திரங்களுடன் செம பர்ஃபார்மன்ஸ் செய்யும் யோகி பாபுவுக்கு எப்போதான் கல்யாணம் என அனைவரும் கேட்க, சமூக வலைதளம் முழுக்க அவர் தான் தற்போது ஹாட்-டாப்பிக்காக மாறியிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/EJotcDwU4AAOp0M.jpg)
Yogibabu Sabitha Rai marriage controversy
சில தினங்களுக்கு முன்பு யோகிபாபு ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக அந்த பெண் தான் யோகிபாபுவின் வருங்கால மனைவி என்று அனைவரும் பேச ஆரம்பித்தார்கள். சிலரோ வாழ்த்துகள் வரை சென்றுவிட்டார்கள். ஆனால் தற்போது நான் அவரின் மனைவியெல்லாம் இல்லைங்க. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்துல நடிச்சோம். ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு அனைவரும் வதந்தியை பரப்பி வருகிறார்கள்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அந்த புகைப்படத்தில் இருந்த பெண்.
காமெடி நடிகர் #யோகிபாபு க்கும், எனக்கும் சக நடிகர், நடிகை என்பதை தவிர எந்த சம்பந்தமும் இல்லை. அவர் நல்ல மனிதர் மற்றும் நல்ல நண்பர். அவ்வளவுதான்.
வதந்திகள் குறித்து
நடிகை சபீதா ராய் விளக்கம் அளித்து வெளியிட்ட வீடியோ, வாட்ஸ்அப் குரூப்பில் வந்தது. pic.twitter.com/ArheBTX61g
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) November 25, 2019
2017ம் ஆண்டு கன்னிராசி என்ற படத்தில் யோகிபாபுவுடன் நடித்திருக்கிறார் சபீதா ராய். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திகளே என்று யோகிபாபு - சபீதா ராய் கல்யாண பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சபீதா ராய்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us