விஜயை ஏன் எங்களுக்கு பெர்சனலாக பிடிக்கிறது?

எந்த முடிவு எடுத்தாலும் அதுல தெளிவா இருப்பாரு.

நடிகர் விஜயை எங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது என்று சில நடிகர் நடிகைகள் சொல்வதை கேளுங்கள்.

நடிகர் ஜீவா – யாரையுமே புண்படுத்தணும்னு நினைக்காத ஆள் அவர். எந்த விமர்சனம் கொடுத்தாலும் ஒரே மாதிரி தான் ரியாக்ட் பணுவார். 100 சதவீதம் ஜாலியான மனிதர். எத்தனை ரசிகர்கள் வந்தாலும் சின்ன முக சுளிப்பு கூட காட்டாமல் அத்தனை பேரையும் மதிச்சு பேசி, ஃபோட்டோ எடுத்துக்குவார். அவர் பக்கத்துல இருந்தாலே போதும். நிறைய கத்துக்கலாம்.

காஜல் அகர்வால் – விஜய் சார் கூட வொர்க் பண்றது எப்பவுமே ஃபெண்டாஸ்டிக் அனுபவம். அவர் கூட நடிக்கும்போது செம ஜாலியா இருக்கும். என்ஜாய் பண்ணி நடிக்கலாம். ஹீ ஈஸ் வெரி ஸ்வீட் பெர்சன்.விஜய் அமேஸிங் டான்சர்கறதால அவர் கூட டான்ஸ் பண்றது சூப்பர் அனுபவமா இருக்கும்.

இயக்குனர் முருகதாஸ் – ஒரு மாஸ் ஹீரோ, பெரிய ஆக்டர்கறதுலாம் நம்ம மனசுல தான். அவர் மனசுல அப்ப்டி எதுவுமே இருக்காது. இதுவரைக்கும் நான் உட்பட எல்லா இயக்குனர்களுமே அவரோட ஒரு பக்கத்தை தான் காட்டியிருக்கோம். அவர் மூடி டைப்னு சொல்றதுலாம் சும்மா. செம காமிக் டைமிக் பெர்சன். துளி பந்தா கூட இல்லாத ஆள். செட்ல அனாவசியமா பேசாம அமைதியா வந்துட்டு வேலையை மட்டுமே பார்ப்பாரு.

இயக்குனர் வின்செண்ட் செல்வா – அவரோட சிம்பிளிசிட்டி தான் மேட்டரே… அது வேற யார்கிட்டயுமே பார்க்க்க முடியாது. இங்கே என்ன சொல்லுதோ அதை பேசுவேன். இங்கே என்ன தோணுதோ அதை செய்வேன்கற டயலாக்கே அவரோட பெர்சனல் கேரக்டரை வெச்சு எழுதினது தான். எந்த முடிவு எடுத்தாலும் அதுல தெளிவா இருப்பாரு.

சூரி – எல்லாத்தையுமே தெரிஞ்சுகிட்டு எதுவுமே தெரியாத மாதிரி நிப்பார். அவர் ஒரு ததும்பாத தண்ணி குடம் மாதிரிண்ணே..யாரா இருந்தாலும் சரி, தோள் மேல கை போட்டு பேசுவார். ஒரு ஃபோட்டோ எடுக்க வர்ற ரசிகனை கூட அவங்களோட தோள்ல கை போட்டு தான் படம் எடுத்துப்பார். அந்த சாந்தமான முகத்துல ஒரு காந்தம் இருக்குண்ணே.

×Close
×Close