அப்பா எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்… கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொன்ன மகள் ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசன் சினிமா துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்களும் திரை உலகத்தினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மகள் ஸ்ருதிஹாசன் அவருக்கு உணர்ச்சிப் பூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Kamal Haasan NEWS,kamal haasan’s 60 years acting wold, shruti haasan, kalathur kannamma, கமல்ஹாசன், கமல்ஹாசன் 60 ஆண்டு சினிமா, tamil cinema, bigg boss, indian 2,
நடிகர் கமல்ஹாசன் சினிமா துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்களும் திரை உலகத்தினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மகள் ஸ்ருதிஹாசன் அவருக்கு உணர்ச்சிப் பூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கு முன்பு களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆகஸ்ட் 12, 1959-இல் தொடங்கிய அவருடைய சினிமா பயணம் வெற்றிகரமாக 60 ஆண்டுகளை எட்டியுள்ளது. கமல்ஹாசன் சினிமாத்துறையில் மட்டுமில்லாமல், மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி செயல்பட்டுவருகிறார். அவரது கட்சி கடந்த பொதுத் தேர்தலில் குறிப்பிடும்படியான வாக்குகளை பெற்றது. இவ்வாறு கமல்ஹாசன் ஒரு சினிமா கலைஞராகவும் அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார்.
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, ஒரு தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் பிக் பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும், அதே நேரத்தில் தனது கட்சியை பலப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த சூழலில்தான் கமல்ஹாசன் சினிமா துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவருடைய ரசிகர்கள், சினிமா துறையினர், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, சமூக ஊடகங்களில் #கமலிசம் என்ற வார்த்தையும் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வகையில், கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தனது தந்தைக்கு உணர்ச்சிப் பூர்வமாக இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்புள்ள பாபுஜி, நடிப்புலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்து எங்களை பெருமைப்படுத்தியிருகிறீர்கள். நீங்கள் எங்களில் பலருக்கும் ஊக்கமளித்திருக்கிறீர்கள். தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தமான (மகாநதி) படத்தின் போஸ்டரை பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளேன். அழகான, தைரியமான, உணர்ச்சிப்பூர்வமான வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். கலைத்துறைக்கு 60 ஆண்டுகளாக உங்களை நீங்கள் அர்ப்பணித்துக்கொண்டுள்ளீர்கள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அறுபது ஆண்டுகளுக்கும் மேல் உங்களுடைய கலைப் பயணம் தொடரட்டும்.” என ஸ்ருதி ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.