சமீப காலமாக திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பலரும் வெளிப்படையாக கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும நிலையில், தற்போது நரிக்கூட்டம் யூடியூப் சேனலின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி தனக்கு திரைத்துறையில் நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து பேசியுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகாரித்து வரும் இந்த காலத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு உச்சத்தை தொட்டு வருகிறது. இதில் சினிமா மற்றும் சின்னத்திரையில் தங்களது நடிப்புத்திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்காத பலரும் யூடியூப் சேனல் மூலம் தங்களது வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.
இதில் சிலர் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருந்தாலும், பலரும் மற்றவர்களின் யூடியூப் சேனலில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நரிக்கூட்டம் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்தான் ஜனனி. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு திரைத்துறையில் ஏற்பட்ட சங்கடமான நிலை குறித்து பேசியுள்ளார்.
இதில் பேசிய அவர், ஒரு படத்தில் நடிக்க நான் செலக்ட் ஆகிவிட்டேன். எல்லாம் முடிந்து நான் எந்த ரோலில் நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ஒரு ரெண்டு அட்ஜஸ்மெண்ட் இருக்கும். உங்களுக்கு ஓ.கே.வா என்று கேட்டார்கள் எனக்கு ஷாக் ஆகிவிட்டது. ஆனால் ஒன்னும் வேண்டாம் என்று நோ சொல்லிவிட்டேன்.
தயாரிப்பாளர், இயக்குநர் நாயகன் என அனைவருடனும், அட்ஜஸ்மெண்ட் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் விடவில்லை. அதிக பணம் தருவதாக கூறி கடைசியாக 15 லட்சம் வரை என்னிடம் பேரம் பேசினார்கள். ஆனால் நான் வேண்டாம் என்று சொன்னால் அந்த வாய்ப்பு பறிபோனது.
ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லியும் என் ப்ரண்டு யாராவது இருந்தால் ரெஃபர் பண்ண சொல்லி கேட்டாங்க. அதன்பிறகு ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்தேன். அந்த படத்தின் என் ஃபிரண்டுதான் ஹீரோ. 4 நாட்கள் ஷூட்டிங் முடிந்து மேக்கப் அறையில் இருந்தபோது. படத்தின் இயக்குநர் என் மேல் கை வைத்துவிட்டார்.
அடுத்த நிமிடம் என் ஃப்ரண்டுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி, இந்த படத்தில் இருந்தும் விலகிவிட்டேன். சினிமா ஆடிஷனில் அட்ஜஸ்மெண்டை விட எனக்கு பிடிக்காத மற்றொரு விஷயம் பாடி ஷேமிங். முகம் மெர்ச்சூடா இருக்குனு சொல்லியும் ரொம்ப ஒல்லியா இருக்கேனு சொல்லியும் ரிஜக்ட் பண்ணாங்க. இதற்காக வெயிட் அதிகரிக்க டேபிளெட்ஸ் எல்லாம் போட்ருக்கேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil