பிரபல யூடியூபர் பிரியாணி மேன் என்கிற அபிஷேக் ரபீ சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் இன்று (ஜூலை 30) கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பரங்கி மலையில் உள்ள தெற்கு சைபர் கிரைம் போலீசார் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சக யூடியூபர் இர்பாஃன் மற்றும் பெண் யூடியூபர் ஒருவர் குறித்தும் அவதூறு மற்றும் தவறான கருத்துகளை கூறி சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூடியூபராக இருக்கும் இர்பாஃன் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு அது பற்றி தனது யூடியூப்பில் ரிவ்யூ வெளிடுவார். இவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர். இருப்பினும் இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குகிறார். அண்மையில் இவர் தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு கடந்தாண்டு இவரது சொகுசு கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுபற்றி எல்லாம், பிரியாணி மேன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் அபிஷேக் ரபீ கடுமையான பேசியும், இர்ஃபான் கார் விபத்து தொடர்பாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இவர் மற்றொரு பெண் யூடியூபர் குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது எல்லாம் இணையத்தில் கடந்த 3 நாட்களாக பேசுபொருளாகவும், விவாதமாகவும் இருந்தது.
இந்நிலையில், பிரியாணி மேன் நேற்று யூடியூப் லைவ்-ல் தற்கொலைக்கு முயன்றார். இதுபெரும் பரபரப்பையும் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“