விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தற்போது அதில் இருந்து விலகியுள்ள நிலையில், தான் விலகியது ஏன் என்பது குறித்து நடிகர் ஜி.பி.முத்துவுடன் இணைந்து வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்
தமிழ் சின்னத்திரையில், சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் சன்டிவி மற்றும் விஜய் டிவி இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. இதில் சன்டிவி சீரியல்களிலும், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக இரு சேனல்களும் ஒன்றை ஒன்று போட்டு போட்டுக்கொண்டு ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்றால், சன்டிவியில் சன் சிங்கர், விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்றல், விஜய் டிவியில் அசத்தப்போவது யாரு இப்படி ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை நடந்தி வரும் வரிசையில் தற்போது பிரபல குக்கிங் நிகழ்ச்சி வர உள்ளது. விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிரபல செஃப தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்தனர்.
4 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகி சன்டிவியில் இணைந்துள்ளார். டாப் குக்கு டூப் குக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு வெங்கடேஷ் பட் நடுவராக இணைந்துள்ள நிலையில், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.பி.முத்துவும் இந்நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.
இதனிடையே வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதற்கு ஜி.பி.முத்து ஒரு வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். இதில், குக் வித் கோமாளியை விட்டு விட்டு ஏன் சன்டிவியில் இணைந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜி.பி.முத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்தேன். சன்டிவியில் அழைத்தார்கள். இப்போது அங்கே இருக்கிறேன்.
மீண்டும் விஜய் டிவி அழைத்தால் அங்கு செல்வேன். மீடியா மிஷன் நிறவனம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்தது. அவங்க வெளியில் வந்து இப்போ இன்னொரு நிகழ்ச்சியை தயாரிக்கிறார்கள். அதில் நான் பங்கேற்கிறேன். அதில் என்ன தப்பு, நான் மட்டுமல்ல, தயாரிப்பாளர் நடுவர் என அனைவருமே இதை தான் செய்கிறார்கள். அவர்களுக்கு எது சரினு படுதோ அதை செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை பகிர்ந்துக்க செஃப் வெங்கடேஷ் பட், ஜி.பி எதற்றாக இந்த கமியூனிகேஷன், ஆனா பங்கம் பண்ணிட் மேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.