Advertisment

டி.டி.எஃப் வாசன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ‘மஞ்சள் வீரன்’ பட இயக்குநர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து யூடியூபர் டி.டி.எஃப் வாசன் நீக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
YouTuber TTF Vasan removed from Manjal Veeran movie Tamil News

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து யூடியூபர் டி.டி.எஃப் வாசன் நீக்கம்

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யூடியூபர் டி.டி.எஃப் வாசன். யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்த இவர் அதில் தனது பைக் அனுபவங்கள் குறித்து பதிவேற்றி வந்தார். குறிப்பாக அதிவேகமாக பைக்கில் சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றினார். அவரது சேனலை பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை என ஏரளமானோர் பின்தொடர்ந்தார்கள்.  

Advertisment

இந்த சூழலில் தான், டி.டி.எஃப் வாசன் காஞ்சிபுரம் அருகில் ஒரு விபத்தில் சிக்கினார். அதிவேகமாக பைக் ஒட்டி போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவருடைய வழக்கை விசாரித்த கோர்ட், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 வருடங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டது. 

இதன்பிறகும் அவர் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வந்தார். குறிப்பாக, திருப்பதி கோயிலில் பக்தர்களை பிராங்க் செய்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பெரும் சர்ச்சையாகிய நிலையில், டி.டி.எஃப் வாசன் மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இதற்கிடையில், டி.டி.எஃப் வாசன் இயக்குநர் செல் அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட வெளியானது. இந்த நிலையில்,  தற்போது மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டி.டி.எஃப் வாசன் நீக்கப்பட்டதாக அப்படத்தின் இயக்குநர்  செல் அம் அறிவித்துள்ளார். அதோடு படத்தின் புதிய ஹீரோ குறித்த அறிவிப்பு அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema Tamil Cinema News TTF Vasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment