சன் டிவி சீரியலில் ஜீ தமிழ் நடிகை என்ட்ரி: சஞ்சீவ்-க்கு இவர்தான் ஜோடியா?
Zee tamil actress Chaitra joins sun tv kayal serial pair to sanjeev: சன் டிவியில் சீரியலில் நடிக்கும் ’ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ்க்கு ஜோடியாக ஜீ தமிழ் டிவி சீரியல் நடிகை
Zee tamil actress Chaitra joins sun tv kayal serial pair to sanjeev: சன் டிவியில் சீரியலில் நடிக்கும் ’ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ்க்கு ஜோடியாக ஜீ தமிழ் டிவி சீரியல் நடிகை
சன் டிவியில் சீரியலில் நடிக்கும் ’ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ்க்கு ஜீ தமிழ் டிவி சீரியல் நடிகை ஜோடியாகியுள்ளார்.
Advertisment
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ். சீரியலுக்கு வருவதற்கு முன்னர், குளிர் 100 டிகிரி, நீயும் நானும், சகாக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் ராஜா ராணி சீரியலே அவரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மேலும் அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ராஜா ராணி சீரியலுக்குப் பின் விஜய் டிவியில் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலில் பிரியங்கா அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது காற்றின் மொழி சீரியல் நிறைவடைந்த நிலையில், சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் சஞ்சீவ் நடிக்கிறார்.
சன் டிவியில் சஞ்சீவ் நடிக்கும் சீரியலுக்கு ‘கயல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சீரியலில் சஞ்சீவ்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் எல்லோரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த சைத்ரா நடிக்கவுள்ளார் என சீரியல் குழு அறிவித்துள்ளது. கயல் சீரியல் சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது. சீரியலில் படபிடிப்பு ஆரம்பமானதை வெளிப்படுத்தும் விதமாக, நடிகர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சஞ்சீவ் ஏற்கனவே நடித்த இரண்டு சீரியல்களின் தலைப்புகளும், திரைப்படங்களின் பெயரைக் கொண்டிருந்த நிலையில் தற்போது சன் டிவியில் நடிக்கும் சீரியலுக்கும் திரைப்படத்தின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. இதனால் சஞ்சீவ்-ஐ திரைப்பட டைட்டில்கள் விடாதோ என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கூறிவருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil