Advertisment

ஒரே மாதத்தில் 7 கிலோ உடல் எடை குறைத்த ஜீ தமிழ் சீரியல் நடிகை: சீக்ரெட் இதுதான்!

ஜீ தமிழ் நடிகை ஸ்ரேயா அஞ்சன் ஒரு மாதத்தில் 7 கிலோ எடை குறைத்து அசத்தல்; டயட் சீக்ரெட் இதோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
shreya anchan

ஸ்ரேயா அஞ்சன்

ஒரே மாதத்தில் 7 கிலே உடல் எடையை குறைத்த ரகசியத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார் ஜீ தமிழ் சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன்.

Advertisment

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா அஞ்சன். பின்னர் அன்புடன் குஷி, அரண்மனை, நந்தனி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: அந்த பிரியங்காவுக்கு பதிலாக இந்த பிரியங்கா: சீதாராமன் சீரியல் நடிகை மாற்றம் பின்னணி

திருமணம் சீரியலில் உடன் நடித்த சித்து மீது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு பின் ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரில் நடித்து வந்தார், இப்போது அந்த சீரியலும் முடிந்துவிட்டது.

சமீபகாலமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வரும் ஸ்ரேயா அஞ்சன் ஒரே மாதத்தில் 7 கிலோ வரை எடைக் குறைத்துள்ளார். உடல் எடையைக் குறைக்க ஸ்ரேயா பின்பற்றிய டய்ட் சீக்ரெட் இங்கே.

உடல் எடையை குறைக்க காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த சப்ஜா விதை, தேன், பப்பாளி சேர்ந்து சாப்பிடுவாராம். நிறைய காய்கறி வகைகள் சாப்பிடுவாராம். பாலக்கீரை- புதினா சேர்த்து நன்கு அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிப்பாராம்.

மாலை நேரத்தில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக வேக வைத்த கருப்பு கடலை, வேக வைத்த சுண்டல் போன்றவற்றை எடுத்து கொள்வாராம். அதோடு காலை 20 நிமிட நடைபயிற்சி செய்வாராம். இதன் மூலம் ஒரு மாதத்தில் 7 கிலோ எடை குறைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shreya Anchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment