Advertisment

விஜய் டிவியில் என்ட்ரியாகும் ஜீ தமிழ் நடிகை; என்ன சீரியல் தெரியுமா?

பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை விஜய் டிவியின் புதிய சீரியலில் அறிமுகம்; சீரியல் பெயர் இதுதான்!

author-image
WebDesk
New Update
yamuna

பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை விஜய் டிவியின் புதிய சீரியலில் அறிமுகம்; சீரியல் பெயர் இதுதான்!

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார் ஜீ தமிழ் சீரியல் நடிகை யமுனா.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஒரு சீரியல் முடிவுக்கு வரும் முன்பே அடுத்த சீரியலுக்கான ப்ரோமோக்கள் வெளியாகிவிடும். அந்த வகையில் தற்போது ஒரு புது சீரியலின் ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் பேய் சித்ரா என்ற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் யமுனா. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், யாரடி நீ மோகினி சீரியல் யமுனாவுக்கு அதிக ரசிகர்களை கொடுத்தது.

சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக நடித்த யமுனா, தற்போது சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். வெயில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், செய், கொலை உள்ளிட்ட படங்களிலும் யமுனா நடித்துள்ளார். 

சின்னத்திரையில் யமுனா முதன்முதலில் அபூர்வ ராகங்கள் சீரியலில் அறிமுகமானார். இந்தச் சீரியலில் அவரது தங்கையும் நடித்திருப்பார். சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு திருமணம் முடிந்தது. பின்னர் ஒரு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியலிலும் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து கவனம் பெற்றார். யமுனா சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

இந்தநிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலான வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற புது தொடரில் யமுனா நடிக்கிறார். இந்த சீரியலுக்கான ப்ரோமோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment