zee tamil anchor archana: நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா, ‘காமெடி டயம்’ மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக காலடி எடுத்து வைத்தவர். இவருடன் இந்த டீமில் நடிகர் சிட்டிபாபுவும் இடம்பெற்றிருந்தார். அதையடுத்து ‘இளமை புதுமை’ , ‘செலிபிரிட்டி கிச்சன்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அப்போதைய 90ஸ் கிட்டுஸ்க்கு ஷ்பெஷல் ஆங்கர் என்றால் அது அர்ச்சனா தான்.
Advertisment
தொண்ணூறுகளில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் பண்ண வந்து, இன்றும் புதிது புதிதாக வரும் ஆங்கர்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் அர்ச்சனா பற்றி அறிமுகமே வேண்டாம். 18 வயதில் திருமணத்திற்கு ஓகே சொல்லி பீக்கில் இருக்கும் போதே சின்னத்திரை விட்டு விலகினார். ”எங்கப்பா அர்ச்சனா” என்று கேட்காதவர்களே இல்லை.அந்த அளவிற்கு அர்ச்சனாவின் பேச்சு மக்களுக்கு பிடிக்கும். அவரின் காமெடி கவுண்டர்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.
திருமணத்திற்கு பிறகு தனது மகள் சாரவுடன் நேரம் செலவிடுவதில் பிஸியானார். சிறிது இடைவெளிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியை இவருக்கு முன்பு டிடி, திவ்யா என ஏகப்பட்ட ஆங்கர்கள் இடை இடையே செய்துக் கொண்டிருந்தனர்.
Advertisment
Advertisements
தனக்கான மேடை, தனக்கான தனி அடையாளம் வேண்டும் என்பதில் அதி தீவிரமாக இருந்த அர்ச்சனா திடீரென்று எடுத்த அதிரடி முடிவு தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா லிட்டில் சாம்ப்பியன் நிகழ்ச்சியின் தொகுப்பாளரானர். தொடர்ந்து 4 சீசனிலும் இவர் தான் ஆங்கர். பழைய அர்ச்சனாவை மக்கள் அனைவரும் பார்த்து கொண்டாட தொடங்கினர்.
அதன் பயன், அவருக்கு சிறந்த சின்னத்திரை தொகுப்பாளினி விருதை சொந்தமாக்கி கொடுத்தது. அவர் விருது வாங்கிய தருணத்தை நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீருடன் மேடையில் அர்ச்சனா பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து தனது மகளையும் ஆங்கராக களத்தில் இறக்கினார். அம்மாவும் மகளும் சேர்ந்து சின்னத்திரை வரலாற்றி முதன்முறையாக ஆங்கரிங்கில் கலக்கினர். அந்த நிகழ்ச்சியும் மிகப் பெரிய வெற்றி.
சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அர்ச்சனா அளித்திருந்த பேட்டியில் தனது குடும்பத்தை பற்றி முழுமையாக மன திறந்திருந்தார். “ 19 வயசுலேயே எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சு.
‘இளமை புதுமை’ பீக்ல இருந்த டைம். கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் மாறிடுமோன்னு எனக்குள்ள ஒரு பயம் இருந்தது. ஆனா, அப்படி எதுவும் நடக்கலை. இந்த வாழ்க்கை எனக்கு சரியாதான் இருக்கும்னு அம்மா எடுத்த அந்த முடிவு, எங்க எல்லாருடைய வாழ்க்கையிலும் ஆகச் சிறந்த முடிவு” என்று தெரிவித்திருந்தார்.