Advertisment

மாட்டிக்கொண்ட பல்லவி... கணவனை ஏற்றிவிடும் மனைவி : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா சீரியல்களின் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
zee tamil serial KD ANA

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

வெளிவந்த உண்மை.. சிக்கிய பல்லவி, கார்த்திக்கு அதிர்ச்சி.. அடுத்து நடக்க போவது என்ன?

கார்த்திக்கை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியால் சண்டையிட அவன் நாளைக்கு ரெக்கார்டிங் முடிந்ததும் பல்லவி கிளம்பிடுவாங்க என்று சொல்லிய நிலையில் இன்று, ரூபஸ்ரீ பல்லவிக்கு போன் செய்து என்ன நடக்குது என்னாச்சு என்று விசாரிக்கும் போது பல்லவி இங்கே நடக்கும் விஷயங்களை சொல்ல அவள் சரி போற வரைக்கும் போகட்டும் பார்த்துக்கலாம் என்று சொல்லி போனை வைக்கிறாள்.

மீனாட்சி பல்லவி பேசுவதை பார்த்து ஏதோ தப்பா இருக்கே என்று சந்தேகமடைகிறாள். அதே நேரம் பல்லவியும் மீனாட்சியை பார்த்து விட இவங்களுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதறுகிறாள். அடுத்து மீனாட்சி கார்த்திக்கு தெரிந்த ஒரு போலீசுக்கு போன் செய்து பல்லவி குறித்து சொல்லி உதவி கேட்கிறாள். அடுத்து மறுநாள் ரெக்கார்டிங்கிற்காக பல்லவி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது மீனாட்சி பேசிய போலீஸ் ஆட்டோவை நிறுத்தி நீங்க யார்? என்று விசாரிக்கிறார்.

என் பெயர் பல்லவி என்று பெயரை சொல்ல அடையாள அட்டையை காட்ட சொல்ல பல்லவி அதிர்ச்சி அடைகிறாள். போலீஸ் தொடர்ந்து அவளிடம் ஐடி கார்ட் காட்டினால் தான் விட முடியும் என்று சொல்லி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அங்கு வரும் கார்த்திக் எனக்கு தெரிந்த பொண்ணு தான் என்று சொல்லி பல்லவியை அழைத்து செல்ல தீபாவும் ஆபிஸ் வந்து விடுகிறாள்.

ரெக்கார்ட்டிங்கிற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க பல்லவியை பாட தயாராக சொல்ல அவள் எப்பவும் கோவிலுக்கு போயிட்டு வந்து தான் பாடுவேன், கோவிலுக்கு மட்டும் போய்ட்டு வந்துடுறேன் என்று அனுமதி கேட்க கார்த்திக் வேறு வழியில்லாமல் சீக்கிரம் வந்துடுங்க என்று அனுப்பி வைக்க தீபாவும் கூட செல்கிறாள். கோவிலில் தீபா இந்த ரெக்கார்டிங் நல்லபடியாக நடக்கணும் என்று வேண்ட பல்லவி நான் மாட்டிக்க கூடாது என்று வேண்டுகிறாள்.

பிறகு தீபா இது கார்த்திக் சாருக்கு முக்கியமான விஷயம், நல்லா பாடணும் என்று சொல்லி அழைத்து வர மீண்டும் பல்லவி தொண்டை சரியில்லை கொஞ்சம் நேரம் கழித்து பாடுவதாக நேரத்தை கடுத்துகிறாள். பிறகு கார்த்திக் திரும்பவும் போய் பாடலாமா என்று கேட்க ஓகே சொல்லி பாட ஆரம்பிக்க கார்த்தி இந்த குரலை உன்னிப்பாக கேட்க இது அவன் கேட்ட ஒரிஜினல் குரல் என்பதை கண்டுபித்து விடுகிறான.

அதன்பிறகு உடனடியாக ரெக்கார்டிங்கை நிறுத்தி யார் நீ என்று விசாரிக்க அவள் நான் பல்லவி கிடையாது, ரூபாஸ்ரீ தான் பாடினால் பணம் கிடைக்கும் என அனுப்பி வைத்ததாக சொல்ல கார்த்திக் அவளை திட்டி அனுப்புகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் கோபமாக வெளியே கிளம்ப தீபா பின்தொடர்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

சண்முகத்தை மிரட்டிய முத்துப்பாண்டி.. பரணி எடுத்த முடிவு, சௌந்தரபாண்டிக்கு ஆப்பு

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி ஹாஸ்பிடலுக்கு சூடாமணி பெயரை வைக்க சண்முகம் சௌந்தரபாண்டியை வைத்து திறக்க அதனை தொடர்ந்து அவர் சண்முகத்தை தர்மகத்தாவாக விட மாட்டேன் என்று சபதம் எடுத்த நிலையில் இன்று சிவபாலன் சௌந்தரபாண்டியால் பூட்டப்பட்ட ரூமுக்குள் செல்ல முயற்சி செய்ய சௌந்தரபாண்டி அதனை தடுத்து நிறுத்தி மிரட்டி அனுப்புகிறார்.

ஒரு நாள் கண்டிப்பா அந்த ரூமுக்குள் சென்று என்ன இருக்குனு தெரிந்து கொள்வேன் என்று பாக்கியத்திடம் சொல்கிறான். இன்னொருபக்கம் சௌந்தரபாண்டிக்கு சண்முகம் தர்மகத்தா தேர்தலில் போட்டியிட கூடாது என்ற எண்ணம் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்க முத்துபாண்டியிடம் வந்து அந்த சண்முகம் தர்மக்கத்தா தேர்தலில் நிற்க கூடாது, அவன் மட்டும் அப்படி நின்னு ஜெயிச்சிட்டா கழுத்தை அறுத்துட்டு செத்து போய்டுவேன் என்று மிரட்டுகிறார்.

பிறகு விடியற்காலையில் இருந்து இரவு வரை பரணி சிகிச்சை பார்த்து கொண்டிருக்க சண்முகம் போதும் நாளைக்கு பார்த்துக்கலாம் என்று வீட்டிற்கு அழைக்க பரணி உன்னால காத்திருக்க முடியாதுனா நீ கிளம்பு என்று திட்ட சண்முகம் காத்திருந்து அவளை அழைத்து வருகிறான். அப்போது எதிரே வரும் முத்துப்பாண்டி சண்முகத்திடம் நீ தர்மகத்தா தேர்தலில் நிற்க கூடாது என்று மிரட்ட சண்முகமும் நான் நிற்க மாட்டேன் என்று சொல்கிறான். ஆனாலும் முத்துப்பாண்டி ஒருவேளை நீ நின்றால் உன்னை கொன்னுடுவேன் என்று மிரட்ட பரணி என் புருஷன் நின்னு ஜெயிப்பான் உன்னால் முடிந்ததை பார்த்துக்க என்று சொல்லி அனுப்புகிறாள்.

அந்த விஷயம் சௌந்தரபாண்டிக்கு தெரிய வர அவர் அதிர்ச்சி அடைகிறார். பிறகு பரணி வீட்டிற்கு வர வைகுண்டம் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். பரணிக்காக சண்முகம் டைனிங் டேபிள் ஏற்பாடு செய்திருக்க பரணி அதில் உட்கார்ந்து சாப்பிட மறுக்கிறாள். இன்னும் 50 நாள் தான் இருக்க போறேன், அப்படியிருக்கும் போது எதுக்கு இந்த ஏற்பாடு எல்லாம் என்று சொல்ல வைகுண்டம் சண்முகத்தை தனியாக அழைத்து சென்று அந்த மனசு இடத்தை பிடிக்க பாரு, ஏதாவது பண்ணு என்று அறிவுரை கூறுகிறார்.

அதுமட்டுமின்றி மந்திரவாதி ஒருவரை சந்தித்து மகனும் மருமகளும் ஒன்னு சேரனும் என்று சொல்லி கேட்க அவர் ஒரு தாயத்தை கொடுத்து இன்னும் 4 நாளில் இதை அவங்க கையில் கட்டிட்டா அவங்க சேர்ந்துடுவாங்க என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment