முத்துப்பாண்டிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வந்த பரணி.. சண்முகத்தின் மீது வந்த சந்தேகம்
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி, வீரா, ரத்னா, கனி ஆகியோர் ஒன்று சேர்ந்து முத்துப்பாண்டி கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவிய நிலையில் இன்று, முத்துப்பாண்டி கண் எரிச்சலில் தவிக்க சௌந்தரபாண்டி பரணிக்கு போன் போட்டு சிகிச்சை அளிக்க கூப்பிடுகிறார். ஆனால் பரணி அதெல்லாம் வர முடியாது என மறுப்பு தெரிவித்து போனை வைத்து விடுகிறாள். இருந்தாலும் அவளுக்கும் ஏதோ ஒரு சோகம் ஒட்டிக்கொள்ள வைகுண்டம் என்னாச்சு என்று கேட்க முத்துப்பாண்டிக்கு நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
அதைக் கேட்ட வைகுண்டம் ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம் மாமா என்று சொல்லி கூப்பிட இருவரும் கிளம்பி சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகின்றனர். பரணி முத்துப்பாண்டிக்கு சிகிச்சை அளிக்க இசக்கி அப்பாவை பார்த்தது பேச முயற்சி செய்ய வைகுண்டம் மகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். அதைத்தொடர்ந்து பாக்கியம் பரணியை கூட்டிட்டு சென்று இவனுக்கு எதுக்கு சிகிச்சை அளிக்க வந்த எக்கேடு கெட்டவனா போறான்னு விட வேண்டியது தானே என்று கேட்க அவன் கண்ணுல மிளகாய் பொடி போட்டதே நாங்க தான் என்ற உண்மையை உடைக்க அதைக் கேட்டு பாக்கியமும் சிவபாலனும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இசக்கி அப்பா தன்னிடம் பேசாதது பற்றி வருந்த பாக்கியம் உனக்காகத்தான் எல்லாரும் சேர்ந்து முத்துப்பாண்டி கண்ணுல மிளகாய் பொடி தூவி இருக்காங்க என்று சொல்ல இசக்கி சந்தோஷப்படுகிறாள். மறுநாள் காலையில் முத்துப்பாண்டி துப்பாக்கி காணும் துப்பாக்கி தொலைந்து போனா என் வேலை போயிடும் என்று பதற பாண்டியம்மா உன் கண்ணில் மிளகாய் பொடி போட்டவங்கதான் எடுத்துட்டு போய் இருக்கணும் என்று சொல்ல முத்துப்பாண்டி சண்முகத்தின் மீது சந்தேகப்பட்டு அவனைப் பார்க்க கிளம்பி செல்கிறான்.
இங்கே பரணி ஹாஸ்பிடல் தயாராகி சண்முகத்தை ட்ராப் செய்ய சொல்லி கூப்பிட அவன் வர மறுக்க தங்கைகள் சண்முகத்தை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க இருவரும் வெளியே வர முத்துப்பாண்டி எதிரே வந்து நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்திக் மீது விழுந்த பழி.. அபிராமி வீட்டில் வெடித்த அண்ணன் தம்பி மோதல்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அருணின் ரிசார்ட்டை ரவுடிகள் அடித்து நொறுக்கிய நிலையில் இன்று, அருணுக்கு விஷயம் தெரிய வர அவன் ரிசார்ட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறான், அங்கு பிடிபட்டு கிடந்த ரவுடியை பிடித்து அடித்து விசாரிக்கும் போது கார்த்திக் தான் பணம் கொடுத்து இப்படி செய்ய சொன்னதாக சொல்ல அருண் அதை நம்ப மறுக்க ரவுடி உண்மையாகவே அவர் தான் இப்படி செய்ய சொன்னார் என்று சொல்கிறான்.
இதனால் ஆவேசமாக வீட்டிற்கு வரும் அருண் கார்த்திக் சட்டையை பிடித்து சண்டைக்கு போக அபிராமி என்னாச்சு என்று கேட்க ரிசார்ட்டை வாங்கிய விஷயத்தை சொல்கிறான், காரத்திக்கு மட்டும் தான் இந்த விஷயம் தெரியும், அவன் பொறாமையில் இப்படி பண்ணி இருக்கான் என்று அவனுடன் சண்டை போட வீட்டில் பெரிய பிரச்சனை வெடிக்கிறது. அருண் எனக்காக எதுவும் செய்ய மாட்ரீங்க, எனக்கு மரியாதை கொடுக்கிறது இல்ல என்று சண்டையிடுகிறான்.
இதில் ஐஸ்வர்யாவும் உடன் சேர்ந்து கொள்கிறாள். அபிராமி கார்த்திக் அப்படி செய்திருக்க மாட்டான் என்று சொல்ல அருண் நீங்க எப்பவும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க என்று கோபப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.